பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


தோல்விகள், ஏமாற்றங்கள் நிறைந்தும் உறைந்தும் கிடக்கின்றன. குமுறி எழுகின்ற எரிமலை மேலே ஒன்றும் நடவாதது போல குந்தி இருக்கின்ற சாமார்த்தியசாலிகளைப் போலத் தான், சமுதாயத்திற்குப் பயந்து கொண்டு, சூழ்நிலையை சமாளித்துக் கொண்டு, எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல நடமாடுகின்றார்கள் மனிதர்கள்.

இவற்றை வெற்றிகரமாக சமாளிப்பவர்கள் விவேகிகளாக ஆகி விடுகின்றார்கள். சமாளிக்க முடியாமல் வாய் விட்டு உளறி விடுபவர்கள் சாதாரணமானவர்களாகி விடுகின்றார்கள் அதையும் மீறி வெளிப்படையாக செயல்படுத்தி விடுபவர்களே குற்றவாளியாகி விடுகின்றார்கள்.

Ο O O

அறிஞனுக்குரிய ஆற்றல்

ஒரு உணவுப் பொருளைப்பார்த்ததும் உற்சாகத்துடன் கொப்பளித்து ஊறி எழும் உமிழ் நீர் போல, ஒன்றைப் பார்த்ததும் பொங்கி வருகின்ற கற்பனைகளையும் கருத்துக்களையும் வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒர் அறிஞனால் தான், சிறந்த படைப்புக்களைப் படைக்க முடியும். உயர்ந்த நூல்களையும் எழுத முடியும்.

Ο O O