பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

 பிறர் செய்கின்ற சிறிய தவறுகளுடன், தான் செய்கின்ற பெரிய தவறை ஒப்பிட்டுப் பார்த்து விட்டு, தான் இப்போது செய்வது பெரிய தவறல்ல. என்று தம் தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டு திருப்தி அடையவே நமது தலைவர்கள் மக்களுக்குக் கற்பித்துத் தருகின்றார்கள்.

‘திருப்தி’ எப்படியெல்லாம் மாறிவந்து உதவுகிறது பார்த்தீர்களா? இதைத்தான் காலத்தின் கோலம் என்கிறோம். வேறு எப்படி சொல்வது?

Ο O O

பெயர்ப்பலகைப் புகழ்

வண்ணச் சுவரொட்டிகளை, எத்தனை தான் அழகாக அருமையாக அச்சிட்டு, சுவர்களிலே ஒட்டினாலும் அடுத்து அதன் மேலே வேறு வகையான வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அதை யாரும் தடுக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது.

தனியாக, உயரமாக, அழகாக எழுதப்பட்டு கடைகளிலே வைக்கப்படுகின்ற பெயர்ப் பலகை இருக்கிறதே! அதற்கு ஒரு மதிப்பு உண்டு. அதில் போய் யாரும் மேலே ஒட்டவும் முடியாது. மறைக்கவும் முடியாது.