பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


இரண்டாந்தர நியாயம்

கணவன் தவறு செய்வதை சகித்துக் கொள்கின்ற மனைவிக்கு கற்புடையவள் என்று பாராட்டு. ஆனால், மனைவி செய்கின்ற தவறை சகித்துக் கொள்கின்ற ஒருகணவனுக்கு கையாலாகாதவன் என்று இழிவான குற்றச்சாட்டு. ஏன் இந்த இரண்டாந்தர நியாயம்?

Ο O O


சூடான துன்பம்

அடுப்பிலே வைத்த குடத்திலே இருக்கும் நீர் சூடாகும் பொழுது, மேலும் கீழுமாகப் போய் வந்து பறந்தபடி சூடாவதை நாம் பார்க்கிறோம். அது போலவே சமுதாய அடுப்பிலே, சூழ்நிலை தீயெழுப்ப, துன்பம் எனும் சூடு ஏற ஏற, மனிதர்கள் எனும் நீர் சுற்றுப்புறம் எங்கும் சென்று, துடித்துப் பெறும் அனுபவங்களில் பக்குவமாகிக் கொள்கின்றனர். வாழ்க்கையில் மனிதர்களின் இடைவிடாத செயல்களும் இயக்கமும் இப்படித் தான் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இல்லையேல், மனிதர்கள் படுத்துக்கிடந்தே வாழ்ந்து தங்கள் வாழ்வை முடித்து விடுவார்களே!


Ο O O