பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


மனிதர்கள் பிரச்சினைகள்

மனிதர்கள் என்பவர்களுக்கு பிரச்சினைகள் என்று மற்றொரு பெயர் வைத்து விடலாம் போலிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சினையைப் பற்றி கவலையாகவோ அல்லது காரசாரமாகவோ தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பிரச்சினைகள் தான் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கின்றனவோ என்னவோ! ஆகவே பிரச்சினைகள் தான் மனிதனை உருவாக்குகின்றன. உபயோகமுள்ளவர்களாக மாற்றுகின்றன என்று நாம் நம்பினாலும், அது நியாயமுள்ளதாகவே இருக்கும் என்று நாம் நம்பலாம்.

Ο O O

பெண்களும் உறவும்

பெண்கள் உறவில் ஆனந்தம் கிடைக்கலாம். ஆனால் அமைதி கிடைக்காது.

Ο O O


அறிவுத் திமிர்

படிக்கப் படிக்க வளர வேண்டியது அறிவுதான் . திமிரல்ல.

Ο O O