பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

 அதட்டினாலும் பணக் குறும்பு எனும் சேற்றை வாலால் வீசி விரட்டி விடுகிறது. தர்மம் என்று பொதுமக்கள் ஒதுங்கிப் போகின்றார்கள். எருமை எழுந்து வருவது எப்பொழுது? அதன் பாலைக் கறந்து பயன் பெறுவது எப்போது?

Ο O O

பாவம் என்பதற்குப் பரிசு பரிதாபம்

பச்சைக் கொடிகள் மண்ணில் கிடக்கின்றனவே என்று பாவம் பார்த்து தன் மீது படரட்டுமே, நன்றாக வளரட்டுமே என்ற நல்ல நினைவுடன் பக்கத்திலே வளர்ந்து நின்ற முருங்கை மரம் அனுமதியளித்தது. அவரைக் கொடியும் படர்ந்து கொண்டது.

சில நாட்கள் கழித்து, மரத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது கொடி. நிமிர்ந்து நின்ற மரம் வளைந்து கொண்டது. வளைய வளையக் குனிந்த மரமோ இலைகளை இழந்தன கிளைகளை இழந்தன.

இன்னும் சில நாட்கள் போன பிறகு, செடியும் காய்ந்தது. மரமும் சாய்ந்து போனது.

இப்படித்தான் பாவம் பார்க்கப் போய் பட்டுப் போன முருங்கை மரமாய் நின்ற நிலையை

அ. க...3