48
வறுமைக் கோடு
வேலை செய்யும் வர்க்கம்-வேலை வாங்கும் வர்க்கம்-வேலை செய்யாமல் ஏய்த்துத் துாங்கும் வர்க்கம்-வேலை செய்யும் வர்க்கம் வேலை செய்ய கணக்குப் பார்க்கிறது. வேலை வாங்கும் வர்க்கம் கணக்கில் ஏய்க்கிறது- தூங்கும் வர்க்கமோ! கணக்கையே விழுங்குகிறது-வறுமைக் கோடு நீண்டு கொண்டே போகாமல் என்ன செய்யும்?
Ο O O
சோற்று வாழ்க்கை
கண்முன்னே கைக்கெட்டும் தூரத்தில் பரிமாறப் பட்ட உணவு.
ஆசைவேகத்துடன் தின்பவர்கள் அலங்கோலக் காட்சி. அவசர அவசரமாக விழுங்குபவர்கள் அசிங்கமான காட்சி. நிதானமாய் சாப்பிடுவர்களுக்கு ரசனை-நேர்த்தி-உணவும் ஜீரணமாகும். உடலும் வலிவு பெறும். ஆசைப்படுவர்களும் அவசரப்படுவவர்களும் தங்கள் வாழ்க்கையில் அடுத்தவர் முன் அலங்கோலமாகத்தான் தெரிகின்றார்கள்.
Ο O O
அரசியல்
அடுத்தவர்களைப் பற்றியே தாக்கிப் பேசிப் பேசி, அதில் தங்களுக்கு சகாயங்களையும், சாதகங்