பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

 தடம் புரளும் தலைவர்கள்

எஞ்சின் ஓட்ட வேகத்திற்கு ஏற்றாற் போல ரயில் பெட்டிகள் ஓடுகின்றன. தண்டவாளத்தில் எஞ்சின் ஒடுகின்றவரை, பெட்டிகளின் ஓட்டமும் சரியாகத்தான் இருக்கும். எஞ்சின் இறங்காவிட்டாலும் பெட்டிகளும் சில சமயங்களில் தடம் புரண்டு விடுவதும் உண்டு. தலைவர்கள் என்பவர்கள் நீதிகள், நியாயங்கள், நெறிமுறைகள் என்று தங்கள் தொண்டர்களுக்கு அறிவுரை தருவதும் உண்டு. தலைவரும் தடத்தில் போகிறவரை தொண்டர்களும் தடத்தில்தான் போகிறார்கள். தங்கள் செளகரியத்திற்காக, தலைவர்கள் நீதி நியாயங்களை மீறும்பொழுது, தொண்டர்கள் அவற்றைப் பின்பற்றுவதும் நியாயம்தானே! தடம் புரளும் தலைவர்கள் இருக்கும்வரை முடமாகாமல் தொண்டர்கள் எப்படி இருக்கமுடியும்? இன்றைய சமுதாயம் கீழ்நோக்கிப் போவதற்கு இத்தகைய தடம் புரளும் தண்டவாளத் தலைவர்கள் இருப்பதுதான் காரணம்.

Ο O O

பணம்...பணம்...பணம்

சிலர் சம்பாதிப்பதற்காகச் செலவு செய்கிறார்கள். அவர்களுக்குப் பெயர் வியாபாரிகள். பலர் செலவு செய்வதற்காக சம்பாதிக்கின்றார்கள். அவர்களோ உத்தியோகஸ்தர்கள்.

Ο O O