பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

அவசரத்தின் ஆவேசம்

நமக்கு எதிலும் ஆவேசம்தான். எப்பொழுதும் அவசரம்தான் என்றாலும் நாம் எதிர்ப்பார்பதுபோல எது நடக்கிறது? யார் நடக்கிறார்கள்? யார் உதவுகிறார்கள். துடிக்கும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். சாமர்த்தியமாக சூழ்நிலையை வெற்றி கொள்ளத் தெரிய வேண்டும். இல்லையென்றால்-குதர்க்க சூழ்நிலையால் குழப்பம் அடைந்து, உள்ளதையும் இழந்து போக வேண்டியது தான்.

அவசரத்திற்கு ஆவேசம் உண்டு. ஆனால் அது போடும் வேஷங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. புத்திசாலிகள் பொறுமையால் சாதித்துக் கொள்கிறார்கள். அவசரக்காரர்கள் ஆத்திரப்பட்டு அனைத்தையும் வீணாக்கிக், கொள்கின்றார்கள். அவசரப்படாமல் அவசரத்தை சந்திக்கிறவர்களே வெற்றியாளர்கள். அந்த நிலை பெற எந்தக் காலம் ஆகுமோ!

Ο O O

யானைச் செல்வம்

யானை தனக்கு உணவூட்டி, உற்றதையெல்லாம் செய்து காப்பவனையே கொன்றுவிடுகிறதே! செல்வமும் அப்படித்தான். கஷ்டப்பட்டு சேர்த்து காப்பாற்றிக் கொண்டிருப்பவனையே. அழித்து விடுகிறதே! ஏன்?

Ο O O