பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


முற்பகலும் பிற்பகலும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற முதுமொழிக்கு விளக்கம் எப்படி மாறி வந்திருக்கிறது பார்த்தீர்களா? முற்பிறவியில் செய்த தீவினை, பிற்பகலில் வந்து தண்டிக்கும் என்ற கருத்து இன்று பொய்யாகிப் போய்விட்டது. முற்பகல் என்பது காலை. பிற்பகல் என்பது மாலை. காலையில் செய்கின்ற குற்றங்களுக்கு அன்று மாலையே அவற்றிற்குரிய தண்டனை கிடைத்துவிடுகிறது. அதனால்தான் அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி மாறி, தெய்வம் அன்றே கொல்கிறது. அரசன்தான் நின்று கொல்கிறான் என்பதாக மாறிவிட்டிருக்கிறது. அதற்குரிய தண்டனை அவ்வப்பொழுதே கிடைத்து விடுகிறது என்பது மிகுந்த அனுபவப் பூர்வமான உண்மையாகவே விளங்குகிறது.

Ο O O

சாதிப்பெருமை

ஒருவருக்குத் தான் பிறந்த சாதியால் பெருமை இல்லை. அவர் சொல்லுகின்ற சேதியால், சொல்லுகின்ற நீதியால் தான் பெருமை. புகழ். சாதியைக் காட்டிப் புகழ்பெற முனைபவர்கள் சகதியின் மேலே மெத்தை போட்டுத் தூங்க முயல்கின்ற மனிதத் தவளைகள் ஆவார்கள்.

Ο O O