பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

 மனிதத்தனம்-1

என்னைப் பார்க்கும்
எல்லோருக்கும்
பெருமூச்சு !
பொறாமைப்பேச்சு !
அதிர்ஷ்டக்காரன்
அவன்வந்தநேரம்
அனைத்திலும் வெற்றி
என்றெல்லாம் பேசுவோர்
ஏராளம் உண்டு !
ஆனால் !
எதிரே வருபவர்
யாராக யிருந்தாலும்
என்னைவிட அவர்கள்
எதிலும் மேலோர் !
அத்தனை அழகு
அப்படி அறிவு
அதிர்ஷ்டக் காரர்கள்
அதிசயப்பிறவிகள்
என்றெல்லாம் எண்ணி
உள்ளுக்குள்ளே
உலகக் குமுறல்கள்