பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


அடிபிடி சட்டத்தால்
மறையவே இல்லையே!
குறையவும் இல்லையே !
 ஏன்? ஏன்?
அதுதான் மனிதத்தனம்!
மாறாத கயமைத்தனம்

மனிதத்தனம்–5
பல்லெல்லாம் கூசும்
புளிச்சக் கீரை
கண்ணால் பார்த்தாலும்
கசக்கும் பாகற்காய்
பக்கத்து வீட்டார்கள்
பதார்த்தம் தந்தால்
இதயமே இனிக்கிறது!
இன்னுமென கேட்கிறது!
நீங்கா நினைவோடு
ஏங்கியே கிடக்கிறது!
ஆனால்...
ஏலக்காய் முந்திரி
ஏராளத் திராட்சை
ஆவின்பால் தேங்காய்
அதற்கு மேல் சர்க்கரை