பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அனைத்துலக மனிதனை நோக்கி போராட்டங்களும் கிறைந்திருந்தாலும்கூடத் தம் பிள்ளைகளே இதிலிருந்து பிரித்து வெளியே அனுப்பிக் கல்வி கற்பிக்க இவர்கள் விரும்புவதில்லை. தங்களுடைய பிள்ளைகள் முழு வளர்ச்சியடைய வேண்டுமானுல் அவர்களைக் குருமார்கள் கடத்துகின்ற பள்ளிக் கூடங்களுக்கே அனுப்பிவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்து வேண்டும். அங்கு பிரம்மச்சரிய விரதம் பூண்டு இயற்கையோடு ஒன்றி அப் பிள்ளைகள் வாழ முடியும். கருக்களும், விதைகளும் முறையே கருப்பையினுள்ளும், பூமிக்கடியிலும் பிற தொல்லைகள் இல்லாத மறைவிடத்தில் வளர் கின்றன. அவற்றிற்குத் தேவையான சத்துப் பொருளைப் பகல்இரவு என்ற வேறுபாடில்லாமல் கருக்களும் விதைகளும் சுற்றுச் சூழ்நிலையிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன. காற்றும், வெளிச்ச மும் உள்ள திறந்த வெளியில் வளரக்கட்டிய சக்தியைப் பெறுகின்ற வரையில் அவைகள் இந்த மறைவிடத்திலேயே இருந்து, வளர்ச்சி யைப் பெறுகின்றன. புறத்தே இருந்து வருகின்ற சக்திகள் அவற்றைத் தாக்கித் தீங்கு விளைவிக்காமல், அவற்றிற்கேற்ற சூழ்நிலையில் இவை வளருமாறு இயற்கை அருள் செய்திருக்கிறது. குழந்தைப் பருவத்தில், குழந்தை மனம், கரு கிலேமையிலேயே இருக்கின்றது. ஆகவே, பள்ளிக்கட்டப் பிள்ளைகள் புறச் சக்திகள் வந்து தாக்காத சூழ்நிலையில் வளரவேண்டும்; வாழவேண்டும். முயற்சியோடும் முயற்சி யின்றியும் கல்வியையும் வன்மையையும் பெறுவதும் அவர்களுடைய தலையாய குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்கேற்ற நிலையில் அந்தச் சுற்றுச் சூழ்நிலை அமைக் கப்படவேண்டும். - —1906. தன்னுடைய புத்தகங்களைத் தின்னத் தெரியாத பைத்தி பக்காரன் மனிதனே என்று கரையான் கினைக் கின்றது. -ரவீந்திரநாத் தாகூர்.