பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 . . . . அனைத்துலக மனிதனை நோக்கி மதிப்பிடுவதாகும். இவ்வாறு குறுகிய நோக்கத்துடன் மனிதனைப் பற்றிச்சிந்திப்பது தீமை பயப்பதாகும். யாருக்குப் பெரும் புகழைத் தரவேண்டுமென்று கினைக்கிருேமோ, அவனேயே குறைத்து மதிக்கத் தொடங்கி விடுகிருேம். ஒரு தனி மனிதன் செய்து முடிக்கக்கூடிய செயல்களே மட்டும் வைத்துக் கொண்டு அவனே மதிப்பிடாமல், ട്രഖജുങ്ങl-l முழுத் தன்மையையும் மதிப்பிடக்ககூடிய இயல்பை, பழங்கால இந்தியர்கள் எங்ங்ணம் கொண்டிருந்தார்கள் என்பதை இந்தப் பழைய ஸம்ஸ்கிருதப் பாடல் தெரிவிக்கின்றது : " தனி ஒரு குடும்பம் தழைக்க ஓர்உயிரினை இனியகல் சமூகம் இலங்கஓர் குடியினை பெற்ற பொன்னுடு பீடுறக் குலத்தினை உற்றகல் ஆன்மா உய்ந்திட உலகையும் தியாகம் செய்வது தக்கதே காண்மின்.’’’ ' ஆன்மா என்பது யாது?’ என்ற கேள்வி கேட்கப்படலாம். அதற்கு முன் இதைவிட எளிமையான ' வாழ்க்கை என்ருல் என்ன ?’ என்ற கேள்விக்கு விடை சொல்லிப் பார்க்கலாம். உண்மையைக் கூறுமிடத்து, இந்த உடம்பு மேற்கொள்ளும் மூச்சு விடுதல், ஜீரணம் செய்தல் என்பவை போன்ற சில கடமைகளே வாழ்க்கை அல்லது வாழுதல் என்று கூறுவது தவறு. இவை அனைத்தையும் ஒரு சேர நிகழ்த்துகின்ற கொள்கைதான் வாழ்க்கை என்று சொல்வதும் பொருத்தமன்று. நிகழ் காலத்தின் சூழ்நிலையி லிருந்து வளர்ந்து, எதிர் காலத்தை நோக்கி எட்டிப் பிடிக்கின்ற ஓர் இயல்பும், எதிர்பாராத சூழ்நிலை பற்றிச் சிந்திக்கின்ற ஓர் இயல் பும், ஓயாத மாற்றங்களில் பரிசோதனைகளைச் செய்கின்ற ஓர் இயல்பும், வாழ்க்கைக்கு இயல்பாகவே அமைந்திருக்கின்றன. மேலும் மேலும் விரிந்து கொடுக்கிற எதிர் கால மலர்ச்சியை, இறந்தொழிந்த பொருள்கள் குறுக்கே கின்று தடை செய்யுமானுல், அப்பொழுது வாழ்க்கை, தன்மாட்டு வைக்கப்பட்ட கம்பிக்கையைக் கெடுக்கின்ற துரோகியாக ஆகி விடுகிறது. சிவன் என்பது வாழ்க்கையின் ஆன்மீக இயல்போகும். அதிலேயே நம்முடைய முடிவற்ற தன்மை அடங்கி யிருக்கிறது. குறுகிய இடத்தில் நடைபெறுகின்ற உணர்ச்சிப் போராட்டங்களின் நிலக்களமாகிய விலங்கு வாழ்க்கையிலிருந்து, விடுதலை பெறுவதற்கு நம்முடைய மனச்சான்றை ஓயாது அது தூண்டிக் கொண்டிருக் கிறது. விலங்குகளைப் போலவே மனிதனும் தன்னலம் என்ற ஒன்ருல் ஆட்சி செய்யப்பட்டாலும் கூட, இதனை எதிர்த்துப்