பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அனைத்துலக மனிதனை நோக்கி வைத்துக் கொண்டிருந்தால்தான், மனித வாழ்க்கையை, முழுத் தன்மையை நோக்கிச் செலுத்த முடியும். அந்தப் பேருண்மை என்னவென்ருல் மனிதனுடைய ஆன்ம வாழ்க்கை ஒரு முடிவற்ற இடத்திலிருந்து மற்ருெரு முடிவற்ற இடத்திற்குச் செல்லுகிறது. அதாவது ஆதியும் அந்தமும் அற்றது என்பதே அந்தப் பேருண்மை. - - - - - - இந்தப் பரந்துபட்ட மெய்க் காட்சியைக் கண்டதில்தான் நம்முடைய பழைய ஞானிகள் இடைக்கால ஐரோப்பியத் துறவிகளி லிருந்தும் மாறுபட்டார்கள். மனித வாழ்க்கைக்கு, முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய மதிப்பை, இந்த இந்திய ஞானிகள் கண்டார்கள். இறுதி வரையில் ஓயாது ஒழியாது முயற்சி செய்வதை இந்திய ஞானிகள் போற்றற்குரிய ஒரு விஷயமாகக் கருதவில்லை. அவர் களுடைய குறிக்கோள் எல்லாம் முயற்சியின் முடிவுக்கு வருவ திலேயே அமைந்திருந்தது. ஆன்ம விடுதலை ஒன்றே மனித முயற்சி யின் முடிவான பயன் என்பதில் அவர்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை. ஐரோப்பா தேசம் சலியாமல் விடுதலை அல்லது சுதந்திரத்துக்கு நன்றி பாடிக் கொண்டு கிற்கின்றது. ஆனல் அவர்கள் சுதந்திரம் என்று குறிப்பது-பொருள் சம்பாதிக்கும் சுதந்திரம், அதனை அனுபவிக்கும் சுதந்திரம், வேலை செய்யும் சுதந்திரம் என்பவற்றையே யாகும். இந்தச் சுதந்திரம் சாதாரணமானது அல்லது எளிமை யானது என்று சொல்லவில்லை. ஆனல் நம்முடைய ஞானிகள் இந்தச் சுதந்திரங்களில் முடிவான திருப்தியைக் காணவில்லை. அவர்கள் அடுத்து என்ன, அடுத்து என்னவென்று கேட்டுக் கொண்டேயிருக்கிருர்கள். அவர்கள் இந்தச் சுதந்திரத்தை முடி வான சுதந்திரமாகக் கருதவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில், ஆசையிலிருந்தும், செயல்களிலிருந்தும் பெறக்கட்டிய சுதந்திரமே பெரிதாக பதிக்கப்பட்டு வந்தது. சுதந்திரத்தை அடைகின்ற முயற்சியில் மனிதன் தன்னுடைய உறுதியைக் கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது. ஏனென்ருல், தளையிலிருந்து உறுதிக்குப் பெறப்படுகின்ற இந்த வேகம் புறத்தே சிதறிப் போகாமலும் வீணுகாமலும் இருந்தாலொழிய, சுதந்திரத்தை அடைவது கஷ்டமாகி விடும். அரசியல் கிலேமையில் மட்டும் சுதக் திரத்தை விரும்புபவர்கள் கூட, அதனையும் ஒரு கட்டுத்திட்டத்திற் குள் அமைக்க வேண்டியிருக்கிறது. அரசியல் துறையில் மட்டும்