பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 அனைத்துலக மனிதனே நோக்கி சென்ற முறை நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸில் நிகழ்ந்த உட்குழப்பத்தை, எந்த ஒரு கட்சியிலும் சேராதிருந்த காரணத்தால் தூரத்தே இருந்து கொண்டு, விருப்பு வெறுப்பற்ற மனப்பான்மையோடு நான் காண முடிந்தது. அதில் நேரடியாக ஈடுபட்டவர்கள் இங்கிகழ்ச்சிக்கு, தேவைக்கு அதிகமான முக்கியத் துவத்தைக் கொடுத்திருக்கிருள்கள். பின்னே வரக்கூடிய பயனை கினைந்து அவர்கள் அஞ்சுகிருர்கள். ஆனால், கிகழ்ந்து முடிந்ததும், பின் வருத்தத்தை விளப்பதுமான நிகழ்ச்சியை விடாமல் பற்றி வைத்துக் கொண்டு இருப்பது தேவையில்லே. காய்ந்து போன மரக்கட்டை உடையும்பொழுது ஒரேயடியாக உடைந்து விடுகிறது. ஆளுல் உயிருள்ள ஒரு மரத்தில் ஒரு கிளேயை வெட்டினுல் அதிகச் சுறுசுறுப்போடு அது மறுபடியும் கிளேத்துப் பூக்கின்றது. கல்ல வலிமையுடைய உடம்பு தன் காயங்களேத் தானே ஆற்றிக் கொள்வது போலக் காங்கிரஸிலுள்ள பிளவுக் காயங்களே காம் ஆற்றிக் கொள்வோமாக. இதிலிருந்து தப்பிப் பிழைப்பது, மேற் கொண்டு புதிய முயற்சிகள் செய்வதற்கு ஒரு தூண்டுதலாக அமை கின்றது. ஆனல் அதே நேரத்தில் இங்கிகழ்ச்சி நமக்குக் கற்றுக் கொடுத்த பாடத்தைத் தாழ்மையோடு ஏற்றுக் கொள்வோமாக. அந்தப் பாடத்தின் சாரம் இதுதான். நாம் செய்ய வேண்டிய பணியின் நிகழ்ச்சி நிரலில், கருத்து வேற்றுமைகள், முரண்பாடுகள் ஆகியவை இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் முழு மனத் தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவரையில் உறங்கிக் கிடந்த நாம் உறக்கத்தில் ஒரு வகை ஒற்றுமையைக் கடைப்பிடித்து வந்தோம். ஆல்ை, விழித் தெழும்போது, வாழ்க்கை பல்வேறு வகைகளில் வெளிப்படும்பொழுது அதனை ஏற்றுக்கொள்ளப் பொறுமை வேண்டும். நமக்கு விருப்ப மில்லாத நிகழ்ச்சிகளே வலிமை காரணமாக அமிழ்த்திவிட முயலக் கூடாது. நமக்கு எதிராக உளளவற்றை அழித்துவி முயலக்கூடாது. பல சமயங் களில் விட்டுக் கொடுத்து வெற்றி பெற முயல வேண்டும். பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் உழைப்பை கல்கக் கட்டிய முறையில் நம்முடைய வழிகளே மாற்றியமைக்க வேண்டும். இத்தகைய வழி, கற்றுக் கொடுக்கும் புதிய படிப்பினைகளுக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ளாமல் போனல், அதனல் பெறக் கூடிய பயனை அடையாமல் போனல், சுயாட்சி என்பது வெறும் சொல்லடுக்காகவே இருக்கும். -