பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்ைமை உரை - 121 அக்ப்பட்டு, சட்டம் எப்படி நிறைவேற்றப்படும் என்பதையும் யாரும் முன்கூட்டியே எதிர்பார்க்க முடியாது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஜனங்களில் ஒரு பகுதியின ருக்குத் தனிப்பட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டால், இந்தச் சலு கைகள் எவ்வளவு தூரத்தில் கொண்டுவிடும் என்பதை அவர்கள் அறிய முடிவதில்லை. ஆட்சியாளரினுடைய பலவீனம் முழுவதும், விளக்கமாக இச் சந்தர்ப்பங்களில் வெளிப்படுவதோடு, தான் எடுத் துக்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி அரசாங்கமே வெட்கப்பட நேரிடுகிறது. தன்னிடத்திலுள்ள குறைபாடுகளே மூடி மறைப் பதற்காகப் பூசி மெழுகுகின்ற கழகங்களை ஏற்படுத்தி, அவர் களுடைய அறிக்கைகளே அரசாங்கம் வெளியிடுகிறது. துன்பம் அடைந்தவர்கள், பொய்யர்கள் என்ற பட்டம் சூட்டப்படுகிருர்கள். கொடுமை இழைத்தவர்கள், கொடுமை இழைக்கப்பட்டவர்களாக வும், அவர்கள் செய்த கொடுமைகள் மன்னிப்பதற்குரியன என்றும் அறிக்கைகள் வெளி வருகின்றன. . மக்களினுடைய பக்கத்திலும் இதேதான் கடைபெறுகிறது. மக்களும் தங்களுடைய கருத்துக்களைத் தீவிரமான முறையில் காட்டத் தொடங்கினுல் அதனையும் கட்டுப்படுத்துதல் என்பது இயலாத காரியம். கட்சியிலுள்ளவர்கள் இம்சை முறைகளே மேற்கொள்வதால் கட்சித் தலைவர்களும் அதற்கு உடன்பட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட கிகழ்ச்சிகளுக்கோ அல்லது கருத்துகளுக்கோ, அந்தத் தலைவர் பொறுப்பாளி யாவார் என்றும் சொல்வதற்கில்லை. மற்ருென்றையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தீவிர வாதம், மித வாதம் என்பவற்றினிடையே உள்ள வேறு பாட்டை நாமாக உண்டாக்க வில்லே. கம்பை ஆள்வோர் கொடுத்த அப்பிரிவிக் எங்கே, எப்போது, என்ன காரணத்திற் ಹT முத்திரையிடப்படுகிறதென்றும் நாம் சொல்வதற்கில்லே. உண்மையைக் க, மிடத்து, எந்தக் கொள்கையையும் அடிப்படை யாகக் கொண்டு இப் பெயர் சூட்டப்பெற்றதாகத் தெரியவில்லே. அதற்குப் பதிலாக ஆள்வோர்களுடைய விநோதமான எண்ணங் களேப் பொறுத்தே இப் பெயர் சூட்டல் நடைபெறுவதாகத் தெரி கிறது. எனவே, அரசாங்கம் தொடர்புகொள்ள வேண்டிய எந்த ஒரு கட்சியும் தீவிர வாதம் பேசும் கட்சி என்பதை நாம் ஒப்புக்கொள்ள