பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 . - அனைத்துலக மனிதனே நோக்கி முடியாது. ஒரு தேசீய இயக்கத்தின் அடையாளம்ே அதுதான். அந்த இயக்கத்தைத் தூண்டுவதற்குரிய காரணம் இருந்து வரு கின்ற வரையில் அதுவும் இருந்து வரும். ஒரு வகையில் அதை அடக்குமுறை மூலம் அடக்கினல், மற்ருெரு வகையில் அது வெளிப்படும். இன்றேல் காலம் வரும் வரையில் காத்திருக்கும். மனித மனத்தின் இயல்பான வெளிப்பாட்டை நாம் வெறுக்கும் பொழுது, ஒரு தனிப்பட்ட கூட்டத்தார் சதி செய்து கொண்டிருப் பதன் பயன் இது என்றுதான் கூறுகிருேம். 18-ம் நூற்ருண்டில் சுயநலவாதிகளாகிய கோயில் குருமார்கள் கூடித்தான் சமயத்தை அல்லது மதத்தை உண்டாக்கினர்கள் என்று ஐரோப்பாவில் கூறிக் கொண்டிருந்தார்கள். இந்தக் குரும்ார்களே ஒழித்துக் கட்டிவிட் டால், சமயம் என்ற தீமை தானே ஒழிந்துவிடும் என்றும் அவர்கள் நம்பினர்கள். ஹிந்து சமயத்திற்கு விரோதமாக உள்ளவர்கள் பிராம்மண சூழ்ச்சிதான் இந்த விளைவு என்று இங்கேயும் கூறுகிருர் கள். எனவே, இந்தியாவிலிருந்து பிராம்மணர்களே துரத்திவிட் டால் ஹிந்து சமயம் என்பதையே ஒழித்துவிடலாம் என்றும் பேசு கிருர்கள். அதுபோல, வெறுப்படைந்த சில மனிதர்கள் ஏதோ ரகசியமான ஒரு சோதனை சாலையில் தீவிரவாதம் ஒன்றைத் தயாரிப் பதாகவும் அவர்களேயெல்லாம் பிடித்துப் போலீசில் அடைத்து விட்டால் தொல்லையை ஒழித்துவிடலாம் என்றும் ஆட்சியாளர்கள் கருதுகிருர்கள். இவ்வாறு கினப்பது, அவர்களைப் பொறுத்தமட்டில் போது மானதாக இருக்கலாம். ஆனல் உண்மைப் பிரச்னை மிக ஆழ மானது. புறக்கண் கொண்டு இந்தப் பிரச்னையைக் காண முடியாது. மிக ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம்தான் இதனை அறிந்து கொள்ள முடியும். பிறர் அறியாத உண்மையை முதல் முதலில் எடுத்துச் சொல்லும்போது, மிக மென்மையான குரலில் அதனே எடுத்துச் சொலல முடியாது. ஒரு பெரிய புயல் காற்றைப் போலத் தான் அது வெளிப்படுகிறது. ஏனென்ருல் பொருத்த மில்லாதவை ஒன்ருேடொன்று மோதும்போதுதான் உண்மை பளிர் என்று தோன்றுகிறது. - கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்குச் செய்திப் போக்கு வரத்தில் ஏற்பட்ட வசதியும், சரித்திரப் படிப்பும், அரசாங்க ஒற்று மையும், இலக்கிய வளர்ச்சியும், காங்கிரஸின் முயற்சியும் பலகால மாக ஒன்று சேர்ந்ததன் மூலம், நாம் அனைவரும் ஒரு தேசத்தைச்