பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அனைத்துலக மனிதன நோக்கி குரிய வலிமையை நம்முடைய சமுதாயமே பெறுமாறு செய்வோம். இவ்வாறு செய்வதற்கு நம்முடைய முழு வன்மையும் தேவைப்படும். எனவே, இப் பெரும் பணியை முடிப்பதற்கு கம் முடைய இறுதி மூச்சு உள்ள வரையில் முயல்வோம். எவ்வாரு யினும், பொருளற்ற பூசலுக்கும், பொறுப்பற்ற சண்டைக்கும் இனி. அகத்தும் புறத்தும், இடங் கொடுக்கமாட்டோம். வெறும் வாய்ப் பேச்சிளுல் நாட்டுப் பணியை யாரும் செய்ய முடியாது. தன்ன டக்கத்தினுலும், விடா முயற்சியினுலுமே நாம் தொண்டு செய்ய முடியும். நம்முடைய பணியை மேற்கொண்டு தொடர்வதற்கு எவ்வாறு, எங்கே, தொடங்க வேண்டும்? எவ்வளவுக் கெவ்வளவு கோபுரம் உயரமாக அமைகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு அஸ்தி வாரமும் ஆழமானதாகவே இருக்க வேண்டும். நம்முடைய தேசிய விருப்பத்தைப் பிரதிபலிக்கக்கூடிய முறையில் ஒரு பெரிய மாளிகை எழுப்ப வேண்டுமென்ருல், ஒவ்வொரு ஜில்லாவிலிருந்தும் பணி யைத் தொடங்கி, ஒவ்வொரு மாகாணத்திற்கும் அவை பிரதிநிதி களாக அமைகின்ற முறையில் பணி புரிய வேண்டும். இந்த மாகாண மாகாடுகள், ஒவ்வொரு கிராமத்திலும் கிளே நிறுவனங்களை அமைத்து, மாகாணத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய எல்லாவிதமான தகவல்களையும் சேகரிக்கத் தொடங்க வேண்டும். செம்மையான முறையில் பணி புரிவதற்குத் துல்லியமான அறிவு தேவையென் பதைச் சொல்ல வேண்டியதில்லை. கிராமங்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் போதுமான சக்தியைப் பெற வேண்டுமென்பது நம் முடைய லட்சியமாகும். பல கிராமங்களை ஒன்று சேர்த்து ஒரு பிராந்திய யூனிட்டாக அமைக்க வேண்டும். இந்த யூனிட்டுகளின் தலைவர் அந்த யூனிட்டைச் சேர்ந்த கிரமாங்களின் தேவைகளை யெல்லாம் அறிந்து, செயல்படுத்தக்கட்டிய சக்தியைப் பெறுகின்ற பொழுதுதான். சுயாட்சி என்பது பொருளுடையதாக இருக்கும். அவர்கள் தங்களுக்குத் தேவையான பள்ளிக்ககூடங்கள், தொழிற் பட்டறைகள், களஞ்சியங்கள், கூட்டுறவுப் பண்டசாலைகள், பாங்கு கள் ஆகியவற்றைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும். ஒவ்வொரு சமுதாய யூனிடரும தாங்கள் அக்னவரும் கட்டுவதற்குரிய ஒரு பொது இடத்தை உண்டாக்கி, அங்கே நியமிக்கப்பெற்றுள்ள தலைவர், அவர்களுடைய வழக்குகள் முதலிய வற்றை விசாரித்து, அப்போதைக் கப்போது முடிவு சொல்ல ஏற்ற W இடமாகவும் அதை அமைக்க வேண்டும்,