பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ss அனைத்துலக மனிதனை நோக்கி கிராமங்களிலுள்ள வீடுகளைத் திருடர்கள், கொள்ளக்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பாதுகாக்க இளைஞர்கள் கூட்டமோ அல்லது சமுதாயப் பொறுப்போ கிராமங்களில் இல்லை. குற்றங்களே விசாரிப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு போலீசார் புகுந்து செய்யும் அட்டுழியங்கள் மிகுந்துள்ளன. உடலில் உயிரை ஒட்ட வைப்பதற்கும், நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் தேவையான சக்தியைத் தருகின்ற உணவு எங்கே ? பாலின் விலை எல்லே கடந்து விட்டது, நெய்யில் கலப்படம் , மீன் என்பது காண முடி யாத பொருள். எண்ணெய் என்ற பெயரில் கலப்பற்ற விஷம் விற் கப்படுகிறது. பெருத்துப் போன நம்முடைய நுரையீரலிலும், பித்தப் பையிலும் எல்லே யற்ற உள் நாட்டு வியாதிகள் இருந்து ஆட்சி புரி கின்றன. இவற்றை யல்லாமல் வெளி நாட்டு வியாதிகள் பலவும் நம்மைத் தேடி முகாம் செய்துவிட்டன. உணவு இல்லை; உடல் வசதி இல்லை; மகிழ்ச்சி இல்லை; கம்பிக்கை இல்லை; அடுத்தவனுக்கு உதவும் ஆளும் இல்லை. அடி விழும் பொழுது தலையைக் குனிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள் கிருேம். மரணம் பயமுறுத்தும்பொழுது எதிர்த்துப் போராடச் சக்தி •' யற்று அதனிடம் சரணடைகிருேம். கியாயம் மறுக்கப்படும்பொழுது நம்முடைய காலம் கெட்டு இருக்கிறதென்று சமாதானம் செய்து கொள்கிருேம். நம்முடைய அடுத்த வீட்டுக்காரர்கள் துன்பப்பட் டால் ஆண்டவன் காப்பாற்றுவான் என்று சொல்லி விடுகிருேம். வேரில் பிடித்த புழுவின் காரணமாக இன்றைய கிலே இவ்வாறு உள்ளது. உயிரை வளர்க்க வேண்டிய மண் காய்ந்து விட்டது. தேச மக்களேத் தாய்போன்று இருந்து காப்பாற்றியும், தேசத்தின் முயற்சிகளுக்குச் சுமைதாங்கியாக இருந்தும் வந்த கிராம சமுதா யங்கள் அழிக்கப்பட்டு இன்று உயிரற்ற கிலேயில் உள்ளன. உயி ரூட்டம் தருகின்ற கிராம கிறுவனங்கள் வேரோடு பறிக்கப்பட்டுக் காலம் என்ற ஆற்றில் மிதந்து செல்கின்ற கட்டைகளாக மாறி விட்டன. - புறத்தே யிருந்து மாற்றங்கள் புகுத்தப்படுமேயானல், பழைய சமுதாய நிறுவனங்கள் கேட்பாரற்ற கிலேயில் இறங்துவிடு கின்றன. புதிய புதிய காலங்களில் ஏற்படுகின்ற புதிய தேவை களேயொட்டி, புதிய நிறுவனங்களே உண்டாக்க முடியாத தேசங் கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கனவாய் அழிந்து மறைந்து விடுகின்றன என்று சரித்திரம் பேசுகிறது. நம்முடைய இனம் கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து போவதைக் கண்ணயராமல்