பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 அனைத்துலக மனிதனை நோக்கி என்ருலும், தூரத்தில் இருந்துகொண்டு தருமீம் செய்வது போல் அதற்குச் செலவழிப்பது எந்தப் பயனையும் தராது. சில நாளேக்கு முன்பு மிக உயர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சில செம்படவர்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கியதோடு திருப்தி யடையாமல் உள்ளுர் விசாரணை என்ற பெயரில் ஒரு கிராமம் முழுவதையும் அலைக்கழித்தார் என்று கேள்விப்பட்டேன். அந்தச் செம்படவர்களே வரவழைத்து, அவர்கள் வழக்கை எடுத்து கடத்தக் கட்டிய ஒரு சிறந்த வழக்கறிஞரைக் கல்கத்தாவில் இருந்து அனுப்பும் செலவை நான் ஏற்றுக்கொள்வதாகக் கடறினேன். குவித்த கைகளோடு அவர்கள் என்னே நோக்கி, ! ஐயா, வழக்கில் காங்கள் வெற்றி பெற்ருல்தான் என்ன பயன் ? போலீஸார் என்றும் எங்கள் கூடவே இருந்து வருவார்கள். ஆகவே, இனி அமைதியாக வாழவே முடியாமல் போய்விடும் ’ என்று கூறிஞர்கள். அவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருப்பதை நானும் உணர்ந்தேன். பல மற்றவர்கள், வெற்றியில்கூடத் துன்பத்தைத்தான் அடைகிறர்கள், ஆபரேஷன் என்று சொல்லப்படும் அறுவை மருத்துவம் மிக வெற்றிகரமாக நடைபெறலாம். ஆனல் வலு விழந்த நோயாளி அவ்வளவு பெரிய சோதனையில் வெற்றி பெறுவதில்லை. உண்மை யான கொடை என்பது வன்மையைக் கொடுப்பதாகும். ஏனைய நன்கொடைகள் பயனற்ற கொடைகளாகும். - ஒரு குழந்தை ஆண்டவனிடத்தில் அழுது கொண்டே சென்று ஆண்டவனே, உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் என்னேயே விழுங்க முயலுகின்றனவே, ஏன் ?’ என்று கேட்டதாம். அதற்கு ஆண்டவன், அருமைக் குழந்தையே, அதற்காக நான் என்ன செய்ய முடியும்? உன்னே நான் பார்க்கும்பொழுது, உன்னை விழுங்க வேண்டுமென்று எனக்கேகடடத் தோன்றுகிறது’’ என்று பதில் கொடுத்தாராம். தகுதி பற்றவருக்கும், வலிமை பற்றவருக்கும் கியா قاته வழங்கப் படும் : வ் ற உறுதியை ஆண்டவன்கூடத தரமுடியாது. இங்கிலேயில் ஆட்சியாளரோ அல்லது பாராளுமன்றமோ கியாயத்தை வழங்க வேண்டுமென்று நாம் என் ஒபாமல் கேட்க வேண்டும்? கல் லெண்ணம் என்பது இந்தச் சமயத்தில் பொருத்த மற்ற வாதமாகும். வலிமை யற்றவர்களோடு சேரும்பொழுது சட்டமும் வலிமை யற்ற தாகி விடுகிறது. போலீஸார் கொடுமை இழைப்பவர்களாக இருக் கிருர்கள். போலீஸாரின் கொடுமைகளுக்குப் பயந்து நாம் யாரி டத்தில் சரண் புகுகிருேமோ, அவரே போலிஸாரின் சிறந்த துணைவ.