பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - அனைத்துலக மனிதனை நோக்கி வேண்டும். மேல் காட்டில் எவை எவை எடுத்துக் બેઝઃ 'கூடிய தகுதிபெற்றுள்ளனவோ, அவற்றை எடுத்துக்கொண்டா லொழிய நாம் தப்பிக்க முடியாது. பழுக்காத, பழம், கிளேயோடு ஒட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், இன்றேல் அது பழுக்' கவே முடியாது. இதை முடிப்பதற்கு முன்னர் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். பிரிட்டிஷார்கள் தங்களிட முள்ள சிறந்தனவற்றை நமக்குத் தரவில்லை யென்றுசொன்னல், அதற்குரிய குற்றம் ஓரளவு: நம்மையும் சாரும். நம்மிடத்திலுள்ள வறுமைத் தன்மையைப் போக்கிக் கொண்டாலொழிய, அவர்களுடைய கஞ்சத்தனத்தையும் போக்க முடியாது. பைபிள் கடறுவது போல யார் யாரிடம் ஏற் கெனவே இருக்கிறதோ, அவர்களுக்கே கொடுக்கப்படும்'. எல்லாவகையிலும் நாம் வலிமை யுடையவர்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான், பிரிட்டிஷார்கள் எதனேக் கொடுப் பதற்காக இங்கே வந்திருக்கிருர்களோ, அவற்றைத் தருவார்கள். மதிப்புக் குறைவுடன் கம்மைக் கீழ் நோக்கிப் பார்க்கின்ற வரையில் கம்மோடு அவர்கள் சமத்துவம் கொண்ட்ாட முடியாது. அவர் களுடைய வாயிற்படிகளில் கையேந்திக்கொண்டு. கிற்போமானுல் மறுபடியும் மறுபடியும் நம்மை விரட்டுவது தவிர அவர்கட்கு வேருெரு வழியும் இல்லை. கம்முடைய மனிதப் பண்பாட்டின் மூலம் அவர்களுடைய மனிதப் புண்பாட்டைத் தட்டி யெழுப்ப வேண்டும். அவர்கள் கூட மிகப் பெரிய நன்மைகளைப் பெறுவதற்குப் பெரும் உழைப்பைத் தந்து, பெருந் துன்பத்தை அடைந்தார்கள். அங் கற்குணங்களைப் பெறுவதற்கு நாமும் வலிமை புடையவர்களாக ஆக வேண்டும். குவிந்த கையோடும் குனிந்த தலையோடும் பிரிட்டிஷாரிடத்தில் செல்வது, அவர்களிடமுள்ள தாழ்மையான அற்பத்தனத்தைத் துரண்டி விடுவதாகும், அதன் எதிரே கோபித்துக்கொண்டு, அக் கோபத்தை வெளிக்காட்டுவதன் மூலம் அவர்களிடமுள்ள தீய பண்புகளையே வெளிக் கொணர நேரிடும். எனவே. பிரிட்டிஷாரிட முள்ள அவ மரியாதை செய்யும் இயல்பு, கோழைத்தனம், மனிதப் பண்பாட்டிற்கு விரோதமான மன நிலை ஆகியவற்றையே இந்தியா துாண்டி விடுகிறது என்பது உண்மையாளுல், அதற்கு அவர்களே மட்டும் குறை சொல்லிப் பயனில்லை; நம் மேலும் அக் குறையை ஏற் றுக்கொள்ள வேண்டும்.