பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அனைத்துலக மனிதனை நோக்கி ஒற்றுமை, அடிமைத்தனத்தில் ஒற்றுமை, கட்டுப்படுத்தப்படுவது.ஆ. ஒற்றுமை என்பவை யெல்லாம் அந்தந்த நேரத்திற்கு மட்டும் பெறப் படுகின்ற ஒற்றுமைகளாகும். நம்முடைய இலக்கியக் கழகமாகிய சாகித்ய பரிஷத்தில் ஒரு கூட்டத்தில் நான் படித்த ஒரு கட்டுரையின்மேல் கடைபெற்ற விவாதத்தில், இலக்கணத்தைப் பொறுத்தவரை, கட்டுமானவ,ை வங்காளி மொழி ஸம்ஸ்கிருதத்தோடு இணைந்துபோக வேண்டு மென்றும், அவ்வாறு செய்தால் குஜராத்திகள், மராத்திகள்” ஆகி. யோருடன் மற்றும் பலரும் அதைப் புரிந்துகொள்வார்கள் என்றும் கூறப்பெற்றது கினேவிற்கு வருகிறது. வங்காளி மொழியின் தனித் தன்மைதான் வங்காளி அல்லாத வர்கள் அம் மொழியைப் புரிந்துகொள்வதற்குரிய பெரிய தடையாகு மென்பதை யாரும் மறுக்கமுடியாது. என்ருலும் அந்த மொழிக்கு ஏதேனும் சக்தியோ, அழகோ இருக்குமானுல் அவை இந்தத் தனித் தனித் தன்மையின் காரணமாகப் பெறப்படுபவையே யாகும். வங் காளி மொழி செயற்கை முறையில் ஸம்ஸ்கிருத அச்சில் வார்க்கப்படாத மொழியாக இருப்பினும் கற்பதற்குக் கடுமையான மொழியாக இருப்பினும்கூட, குஜராத்தி, இன்று வங்காளி மொழி யைக் கற்றுக்கொள்ள முயல்கிருன். சந்தாலி மொழியிலுள்ள தனித் தன்மையை, சந்தாலித் தன்மையைப் போக்கிவிட்டால் மட்டும் நாமும் அந்த இலக்கியத்தை அனுபவிக்க முடியுமா? வங்காளி-சந்தாலி உறவை வலுப்படுத்துவதற்கு இந்த அளவு முட்டுக் கொடுத்தால் மட்டும் போதுமானதாகுமா? வங்காளி மொழியில் காணப்பெறும் தனித் தன்மையுடன் வங் காளி இலக்கியம் வளர்ச்சி அடைந்தால்தான் வங்காளிகளுக்கும், ஹிந்தி பேசும் மக்களுக்குமிடையே ஒரு கிலேயான ஒற்றுமை ஏற்பட முடியும். ஹிந்துஸ்தானி பேசும் மக்களோடு எளிதாகத் தொடர்பு கொள்ளவேண்டு மென்பதற்காக ஒரிங்தி மொழியைப் போலவே கங்காளி மொழியையும் ஒரு வங்காளி செய்துவிடுவானேயானுல், அவனுடைய இலக்கியம் இறந்துபோவதோடு மட்டுமல்லாமல் எந்த ஹிந்துஸ்தானியனும் அவனச் சட்டை செய்யமாட்டான். ஒரு காலத்தில், நன்கு கற்றறிந்த அறிவுடைய ஒருவர், கீழ்க்கண்டவாறு என்னிடம் கூறினர் :- நம்முடைய தேசீய ஒற்றுமைக்கு வங்காளி இலக்கிய வளர்ச்சி ஒரு தடையாக இருந்து வருகிறது. ஏனென்ருல் இந்த இலக்கியம் நல்ல வயதை அடைய அடைய எளிதில்