பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அனைத்துலக மனிதனை நோக்கி படலம் போல விளக்கம் இல்லாமல் இருக்கின்றன. கம்கண்ணெதிரு, எதைக் காண்கின்ருேமோ அதுதான் இந்த நேரத்தில் கம் முன்னர்; பெரிதாகக் காட்சியளிக்கிறது. ஹிந்து சமுதாயத்தின் இன்றைய அமைப்பு முறை ஹிந்துவினுடைய உண்மையான சக்தியையும், இயற்கையையும் பல்வேறு வழிகளில் அழுத்திக் கொண்டிருக்கிற, தென்பதை நாம் உணர்வது கஷ்டமாக இருக்கிறது. ஹிந்துப் பஞ்சாங்கங்களில் மாதக் கடைசியில் செய்ய வேண்டிய சடங்கு களைப் பற்றி விளக்கம் கூறுகின்ற படங்கள்தாம் ஹிந்து நாக ரிகம் என்று கினைக்கின்ற அளவுக்கு வந்துவிடும். இந்தப் படங். களில் எப்போதும் புறத் தூய்மையுடனும் பிரிவினை செய்கின்ற கோலத்துடனும் பட்டினியாலும், சமயச் சடங்குகளாலும் நொய்ந்து போன வடிவங்களும் உலகப் பொருள்களிலிருந்து எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கின்ற வடிவங்களுமே காட்சியளிக் கின்றன. ஆனால், ஒரு காலத்தில் ஹிந்து நாகரிகம் முழு வலிமை பெற்றதாய்ப் பல்வேறு செயல்களில் ஈடுபட்டதாய் இருந்ததும் உண்டு. அக் காலங்களில் ஹிந்துக்கள் கடல் கடந்து சென்று குடியேற்ற நாடுகளே அமைத்துத் தங்களுடைய கலைகள், கைத் தொழில்கள், வாணிகம், பெருந் தொழில்கள் ஆகியவற்றை வளர்த்த நிலையும் உண்டு. அக் காலங்களில் ஹிந்துவினுடைய புதிய புதிய கருத்துக்களைச் சரித்திரம் கண்ட துண்டு. அவனுடைய சமுதாயத் தில் சமுதாய, சமயப் புரட்சிகளுக்கும் இடமிருந்தது. அக் கிலேயில் பெண்கள் கட்ட உடல் வலிமை, கல்வி யறிவு, ஆன்ம விசாரணை ஆகியவற்றைப் பெற்றிருந்தார்கள். மகா பாரதத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் சமுதாய மாறு பாடுகளும், பழக்கங்களும் மாற்ற முடியாமல், இரும்பில் செய்யப் பட்டவை போல எக்காலத்திலும் இருந்ததில்லை யென்பதை நிரம்பக் காணலாம். பல்வேறு வடிவம் கொண்ட பெரிய ஹிந்து சமுதாயம் வாழ்வில் முழுக் கிளர்ச்சி கொண்டு, எப்போதும் விழித் திருக்கின்ற மனத்தால் தூண்டப்பெற்று, புதிய புதிய வழிகளில் செல்ல முயன்றது. பிழைகள் கோந்தாலுக.ட உண்மையை நோக்கிச் சென்றும், பல தோல்விகளைத் தாண்டி இறுதியில் ஒரு முடிவைக் கண்டும், பல்வேறு முயற்சிகளே மேற்கொண்டு இறுதியில் காரிய வெற்றியைக் கைகொண்டும், அந்தச் சமுதாயம் நடைபெற்று வந்தது. பழைய சாஸ்திரங்கள் எழுதப்பெற்ற ஏடுகளில் கட்டி யுள்ள நூலின் அடியில் தொங்கும் தண்டுபோல உயிரற்ற ஒரு நாடகத்தை நாள்தோறும் அந்தப் பழைய சமுதாயம் நடத்தி வர வில்லை. அந்தப் பழைய சமுதாயத்தில் புத்தர்களும், ஜைனர்களும்