பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அனைத்துலக மனிதனை நோக்கி - A வஞ்சகம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மை என்ன் வென்ருல் அவர்களுடைய மனத்தின் ஆழத்தில் புதிய கம்பிக்,ை பிறந்துவிட்டாலுங்கட்ட, உதட்டளவில் பழைய கொள்கைகளுக்கு வணக்கம் செலுத்துகிருர்கள். ஆகவேதான் எதனைச் செய்ய, வேண்டுமோ அதனைச் செய்துகொண்டிருக்கும்போது, இறந்து போன காலத்தின் பேச்சையே பேசிக்கொண்டிருக்கிருேம். நவீனக் கல்வி முறையில் இருக்கின்ற ஆபத்துக்களே அறிந்தாலும், அத். கல்வியின் கன்மைகளைப் பற்றியும் நாம் உணர்ந்து கொண்டோம், எவ்விதமான ஊறும் இல்லாமல் செத்துப் போவதை விரும்பாமல், வீரர்களைப் போல் வாழ்வின் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள நாம் தயாராகிவிட்டோம். இதன் மூலம் எத்தனை ஏமாற் றங்கள் ஏற்படுமோ ? எத்தனை தவறுகள் ஏற்படுமோ? இவை யனைத்தையும் நாம் அறிவோம். பழைய வழக்கங்களை ஒருவன் உதறித் தள்ள முயலும்போது, முறைமை கெட்டுப்போவதனல் ஏற்படும் துன்பத்தையும் அவன் அனுபவிக்கவேண்டுமென்பதையும் நாமறிவோம். நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருந்த ஓர் அறையைத் துளசி தட்டத் தொடங்கில்ை அதன் பயனுக தூசும் முழுவதும் மேலே கிளம்பி நம்மைத் திணறச் செய்யும் என்பதையும் அறியவேண்டும். - - உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் அனைத்தும் தங்க ளுடைய தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளப் பெரிதும் முயன்று வருகின்றன. அதே நேரத்தில், பெரிதாக உள்ள மானிட இனத்தோடு தமக்குள்ள தொடர்பையும், ஒவ்வொரு நாடும் அறிகின்றது. இதனை அறிகின்ற காரணத்தால், ஒவ்வொரு நாடும், தனக்கேயுரிய தனித் தன்மையைப், பிற உலகத்தோடு சம்பந்தப் படாமல் இருக்கவேண்டுமென்று விரும்புகின்ற தனித் தன்மையை உதறி விடுகின்றது. ஒவ்வொரு நாடும் தன்னிடத்திலுள்ள பொருள் களே எல்லாம் அனைத்துலகமும் காணுமாறு வெளிப்பட எடுத்துக் காட்டுகின்றது. ஒருவருக்குச் சொந்தமாகவும் தனித்தும் இருக்கின்ற அறைக்குள் புகுந்துகொண்டு தம்முடைய தனித் தன்மையை வாய் கிழியப் பேசுவதால் இனிப் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவருடைய தனித் தன்மையையும் மானிட சமுதாயத்தின் ஒர் அங்கா ஆக்க வேண்டுமென்ற ஒரு கிளர்ச்சி ஒவ்வோர் ஆன்மாவிலும் ஏற்பட்டுள்ளது. குறுகிய மாகாண வெறியைத் தேசப்பற்று என்று சொல்லக் கூடிய காலம் மலையேறிவிட்டது. பழக்க வழக்கங்கள் என்றும்,