பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்ள்ை 181 - கிறேன். எனவே இந்த உலகை எவ்வளவு அதிகமாகப் பார்க்க முடியுமோ, அவ்வளவு அதிகமாகப் பார்க்க விரும்புகிறேன். இரண்டு கண்கள் எனக்கு அளிக்கப்பெற்றுள்ளன. அவற்றின் உதவியால் இந்த உலகின் பரந்துபட்ட தன்மையை எத்தனே கோணங்களில் முடியுமோ அத்தனே கோணங்களிற் பார்த்துவிட விரும்புகிறேன். அதே நேரத்தில், ஒர் இலாபத்தையும் எதிர்பார்க்கிறேன் என் பதையும் ஒப்புக்கொள்கிறேன். பிரயாணத்தால் உண்டாகின்ற மகிழ்ச்சியைப் பெறுவதோ டல்லாமல் அவற்றின் மூலமாக என் கருத்தையும் நிறைவேற்றிக்கொள்ள விரும்புகிறேன். மனத்தில் ஒருவித பக்தியோடு இந்தியாவில் பிரயாணம் செய்யும் ஐரோப்பியன் ஒருவன் யாத்திரை செய்கின்ற பயனே அடை கின்ருன். அத்தகைய ஐரோப்பியர்களே யான் அறிவேன் ; அத் துடன் அவர்களிடம் அதிக மதிப்பு முண்டு எனக்கு. இவ்வாறு கூறு வதால் ஐரோப்பியர்கள் மூலங்தான் இந்தியாவின் சிறப்பை நான் அறிந்துகொள்கிறேன் என்பது கருத்தன்று! அவர்களுடைய ஆன்ம பலத்தின் எதிரே யான் தலை வணங்குகிறேன். முன் பின் பழக்க மில்லாத பொருள்களே ஊடுருவி நோக்கி அவற்றின் பின்னே உள்ள நன்மைகளைக் கிரகிப்பதே இந்த பலம், அது மிக மிக அரிது தான். உண்மையின் இடையே சஞ்சரிக்கின்ற சக்தி பிறநாடு களில் உலாவும்பொழுதுதான் பரீட்சிக்கப்படுகிறது. குறுகிய மனம் படைத்தவன் தனக்குப் பழக்கமானவற்றில்தான் உண்மை இருக்கிறதென்று கூறி, மற்றவற்றை முக்கியமற்றவை, பொய் யானவை என்று ஒதுக்கி விடுகிருன். உண்மையின்மேல் நாம் பக்தி கொண்டிருக்கிருேமா என்பது பழக்கமில்லாத பொருள்களே நெருங்கிச் சென்று கண்டு, அவற்றின் அப்பால் என்ன இருக்கிறது என்று கண்டு, அதற்கு வணக்கஞ் செலுத்துவதன் மூலம்தான் சோதனைக் குள்ளாகிறது. அவ்வாறு செலுத்தப்படும் வணக்கம் குருட்டுப் பழக்கத்தால் செலுத்தப்படாமல், திறந்த மனத்துடன், விருப்பத்துடன் செய்யப்படு வதாகும். ஓர் இந்தியனுக்கு, அவனுடைய மனம் பழமைக் கொள்கை களால் கட்டுண்ணுமல் ευουοι υιοί -5ύο ουσιώωιu மாடுமேயாகுல், ஐரோப்பியப் பிரயாணம் உண்மையில் பயனளிக்கக் கூடிய யாத்தி ரையாகும். யாத்திரை நோக்குடன் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் கள், கம்முடைய புற வாழ்க்கையில் கிரம்பியுள்ள துன்பங்களையும் தொல்லைகளையும் கவனிக்காமல் இல்லை, மேலாகக் காட்சியளிக்கும்