பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்குள் 183. ஐரோப்பா மானிட ஆன்மாவை வெளிப்படுத்தாமல், வெறும் உலகாயதப் பொருள்க்ளை மட்டுமே சேகரிக்கின்றது என்று கூறு வது, ஒரு மரம் தான் உதிர்க்கும் காய்ந்த சருகுகள் மூலம் தன்னு டைய உயிர்ச்சக்தியை வெளிக் காட்டுவதில்லை என்பது போல் இருக்கிறது. மரத்திலுள்ள உயிர்ச்-சக்திதான் காய்ந்த சருகுகளே உதிர்க்கச் செய்கிறது. காய்ந்த சருகுகள் உதிர்வதனுல் மரம் இறந்து போனதாகக் கருதக் கூடாது. வாழ்வுதான் ஒவ்வொரு வினுடியும் சாக முடியும் , சாவு சாகும் பொழுதுதான் உண்மை 'மரணம் நேரும். - நவீன ஐரோப்பாவில் உள்ள மனிதன் ஓயாமல் சோதனை செய்வதிலும் மாற்றத்திலும் ஈடுபட்டிருக்கிருன். அவன், இன்று ஏற்றுக் கொள்வதை நாளே உதறிவிடுகிருன். இயக்க மில்லாமல் ஓரிடத்தில் இருக்க அவன் விரும்பவில்லை. இந்த ஓயாத மாற்றத்தில் ஆழமே இராது எனப் பலர் கினேக்கின்றனர். அனைத் துலகிலும் உள்ள எல்லாப் பொருள்களும் பிறப்பு, இறப்பு என்ற வளையத்துள் அகப்பட்டிருக்கின்றன. என்ருலும் இதே அன்த் துலகைப் பற்றிக் கடறிய நம் ஞானிகள் அனைத்தும் மகிழ்ச்சியின் பயனுகவே தோன்றுகின்றன’ என்று கூறவில்லையா? மரணத்தின் மூலந்தான் அழியாமை தன் இருப்பை ஓயாது காட்டிக் கொண்டிருக்கிறது. புறத் தோற்றத்தை, முடிவான பயன் என்று நாம் தவருகக் கணக்குப் போட்டு விட்டால், ஆன்மாவைக் கான முடியாது போவதுடன், புறத் தோற்றத்தை ஏற்றுக் கொள் வதிலும்கட்ட இன்பம் காண முடியாமற் போய்விடும். ஐரோப்பா விற்கும் ஓர் ஆன்மா உண்டு ; அதற்குரிய வலிண்மயை அது இழந்து விடவில்லை. ஐரோப்பாவின் ஆன்மீக இருதயத்தை நாம் காணும் பொழுது, அதனுடைய உள் உண்மையையும் காண முடியும். அந்த உண்மை வெறும் அறிவாக இராமல், வெறும் உலகாயத மாக இராமல், வாழ்வின் இன்பமாகவே இருப்பதை அறிய முடியும். நான் சொல்லிக் கொண்டு வருவதை, சமீபத்தில் கடக்த ஒரு கிகழ்ச்சியால் விளக்க முடியும். இரண்டாயிரம் பிரயாணிகளே ஏற்றிக் கொண்டு அட்லாண்டிக் கடலைக் கடந்து சென்று கொண் டிருந்த ஒரு கப்பல் நடு கிசியில் பனிக் கட்டியில் மோதி உடைந்து விட்டது. கப்பல் மூழ்குங் தறுவாயில், அதில் இருந்த ஐரோப்பியர் களும் அமெரிக்கர்களுமான ஆண்கள், தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதை விட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் காப்பதில் முனைங்தனர். அந்த அஞ்சத் தகுந்த, திடீரென்று தோன்றிய