பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 அனைத்துலக மனிதனை நோக்கி ஆபத்து, இந்த மக்களுடைய அக வாழ்வு எவ்வாறு உள்ள தென்பதை, திரையைக் கிழித்து நமக்குக் காட்டுவதுபோல இருக் கிறது. அவர்களுடைய பெருந்தன்மைக்கு எதிரே நம் மரியாதை யையும் வியப்பையும் காட்டத் தல வணங்குகிருேம். சில நாட்களுக்கு முன்னர், நம்முடைய நண்பர்கள் சிலர் டாக் காவிலிருந்து ஆற்று வழியாக நீராவிப் படகின் மூலம் வந்து கொண் டிருந்தனர். கடு ஆற்றில் எதிர்பாரா விதமாக ஒரு சாதாரணப் படகு இந்த நீராவிப் படகில் மோதிக் கவிழ்ந்து விட்டது. அந்தப் படகிலிருந்த மூவரும் நீரில் மூழ்கி இறக்குங் தறுவாயில் இருந்தனர். அந்த நேரத்தில் விசைப் படகில் இருந்தவர் பலரும் அவ் வழியே சென்ற மற்ருெரு படகில் உள்ளவர்களைக் கூவி உதவி செய்யுமாறு வேண்டினர். ஆனல் அந்தப் படகில் உள்ளவர்கள் திரும்பிக்கூடப் பாராமல் சென்று விட்டனர். கீரில் விழுந்தவர் களைக் காப்பதில், ஒரு வித ஆபத்தோ கஷ்டமோ இல்லை என்ருலும், அந்தப் படகோட்டிகள் அதுபற்றிக் கவலைப்படாமல் சென்று விட்டனர். - இது, மற்ருெரு நிகழ்ச்சியை எனக்கு நினைவூட்டுகிறது. இரவு முழுவதும் பெரும் புயலடித்து விடியற்கால நேரத்தில் கொஞ்சம் தணிந்திருந்தது. என்ருலும், ஆறு கடிய வேகத்துடன் சென்று கொண்டிருந்தது. என்னுடைய படகு கரையில் கட்டப்பட் டிருந்தது. திடீரென்று ஒரு பெண்ணின் உடம்பு வெள்ளத்தில் செல்வதைக் கண்டேன். அவளுடைய நீண்ட கடந்தல் மட்டுமே நீரின் மேலே தெரிந்தது. பக்கத்தில் கின்றிருந்தவர்களை நோக்கி என்னுடைய படகை எடுத்துச் சென்று ஒருவேளை, அந்தப் பெண் உயிருட னிருந்தால் அவளேக் காப்பாற்றுமாறு கூறினேன். ஒரு வரும் அசையக்கூட வில்லை. அடுத்து அவளைக் காப்பாற்றப் போகின்ற ஒவ்வொருவருக்கும் ரூ. 5/- தருவதாகக் கூறினேன். உடனே பலர் படகில் ஓடிச் சென்று நினைவிழந்து கிடந்த அந்தப் பெண்ணைக் கொண்டுவந்து சேர்த்தனர். சில மணி நேரம் சென்று அவள் நினைவு வரப்பெற்ருள். இந்த ஐந்து ரூபாய் வெகுமானம் இல்லையானல் அவள் உயிரை இழந்திருப்பாள். மற்ருெரு சந்தர்ப்பத்தில், அதிக ஆழ மில்லாத ஒரு நீர்ப்பகுதி யைப் படகு மூலம் கடந்து கொண்டிருந்தேன். ஆறு வந்து ஏரியில் விழும் முகத்தில் செம்படவர்கள் ஆற்றின் அகலத்தைக் குறைப் பதற்குக் கழிகளை கட்டு வைக்கிருர்கள். அவர்கள் மீன்பிடிப்பதற்கு இவ்வாறு செய்வது வசதியாக இருப்பினும், ஆற்றின் வேகத்தை