பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்ள்ை 187 உள்ளனர். இவ் வழி சாத்திரங்களில் கறப்பெற்றிருப்பதாலும், கெளரவம் என்ப்து உலகப் பொருள்கள் போல் பயன்படக் கட்டிய நாகலானும் அவர்கள் அதனைப் பெறத் துன்பத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனல் உலகப் பொருள்கட்கு மட்டும் வணக்கஞ் செலுத்துபவன், மன்த்தில் உதித்து எழுகின்ற ஓர் உணர்ச்சிக்காக மட்டும் உயிரைக் கொடுக்கச் சித்தமாக மாட்டான். தேசத்திற்காகவும், மானிட சமுதாயத்துக்காகவும், காதலுக் காகவும், அறிவின் வளர்ச்சிக்காகவும், இருதயத்தின் துாண்டுதல் ஒன்றையே காரணமாகக் கொண்டு காள்தோறும் துயரத்தை அனுபவிக்கச் சித்தமா யிருப்பவர்கள் ஐரோப்பாவில் உண்டு. - இவை அனைத்தும் உண்மையானவை யல்ல. இதில் பெரும் பகுதி வீம்புக்காகச் செய்யப்படுவதாகவும் இருக்கலாம். ஆளுல் அதற்காக உண்மையாக உள்ளவற்றையும் குறைத்துப் பேசுதல் முறையற்றதாகும். சில இரவுகளில் சந்திரனைச் சுற்றி ஓர் ஒளி வளையம் தோன்றக் காண்கிருேம். அது வெறும் சாயைதான் என்பதை நாம் அறிவோம். உண்மையில் உள்ள சந்திரனைச் சுற்றிக்கூட மாயையாக இருக்கிற இந்த வளையம் காட்சியளிக் திறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் உண்மை ஒளியைச் சுற்றிப் போலிக் கெளரவம் இருத்தல் கூடும். ஆளுல், உண்மைப் பொருள் இருக்கின்றது என்பதற்கு இந்தப் போலியே தக்க சான்ருகும். மேடுைகளில் உள்ள வியக்கத் தகுந்த மனிதர்களைப் பற்றிப் படித்துள்ளோம். எனினும் அவர்களே நெருக்கத்தில் வைத்துக் கண்டதில்லை. நாம் பார்த்துள்ளவர்கள் ஐரோப்பாவின் புகழ்பெற்ற வர்களைச் சேர்ந்தவர்க ளல்லர். பல காலம் முன்பு நாம் ஹோமர்கிரன்' என்ற ஸ்வீடன் நாட்டவரைக் கண்டோம். அவர் ராம் மோகன்ராயைப் பற்றிப் படித்தமாத்திரத்தில், இந்தியா வில் ஈடுபாடுகொண்டு இந்த காட்டில் வந்து வசித்து வந்தார். வசதிக் குறைவு காரணமாக, இங்கு வசிப்பதுகடடக் கடினமாக இருந்தது. இங்குள்ள மக்களையோ, அவர்கள் மொழியையோ அவர் அறிய வில்லை எனினும், ஒரு வங்காளியின் வீட்டில் தங்கி ராம் மோகன் ராயின் நாட்டைத் தம்முடைய நாடாகச் செய்து கொண்டார். சில காலமே வாழ்ந்தார் எனினும், அவரை அறிந்தவர்கள் எவ்வளவு உறுதியான முறையில், எவ்வளவு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு அவர் கம்மவர்கட்குத் தொண்டாற்றினர் என்பதை அறிய முடியும். எனினும் கிம்தோலாச் சுடுகாட்டில் அவர் சடலம் எரிக்கப்பட்டபொழுது, ஹிந்துச் சுடுகாடு எவ்வாறு : தீட்டுப்படுத் 18 -