பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அனைத்துலக மனிதனை நோக்கி துன்பத்தில் நாம் பெறும் இன்பமே, ஆகங்காரத்திலிருந்து நம்மை விடுவித்து அப்பாலும் சென்று அனைத் துலக கிலமைக்கு உய்க்கிறது. சத்தியத்தின் விலை துன்ப அனுபவமேயாகும். ஆர். அனுபவமே ஆன்மா வளமடைவதற்குள்ள "வழியாகும். છtu அனுபவ மூலமே ஆன்மா தன் வலிமையை வெளியிடுகிறது அதன் மூலமே நாம் நம்மையும், மானிட சமுதாயத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதனுல்தான் போலும், " வலுவற்றவர்கள் ஆன்மாவை அறிய முடியாது’ ’ என்று சாத்திரங் கூறுகிறது. மற்ருெரு வகையாகக் கூற வேண்டுமானல், துன்பத்தை அனுபவிக்கச் சக்தி யற்றவன் தன்னைத்தான் உணர முடியாது. துன்பத்தின் பயனுகக்கூட நாம் ஒருவருக் கொருவர் நெருங்க் வரப் பழகிக்கொள்ளவில்லை. நம்முடைய மக்களை நம்முடையவர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டுமானல் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும். தான் பெற்ற குழந்தையைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமானல், பெற்ற தாய் கூட, அதற்குரிய தொண்டைப் புரிந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டும். கம்மால் உண்மையாக மதிக்கபடுகின்ற பொருள்களைப் பொறுத்தமட்டில் பிறர் துண்டுதல் இல்லாமற்கூட இந்த விலையைக் கொடுக்கிருேம் ஆளுல் நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களே நம்முடையவர்கள் என்று நெஞ்சார் ஏற்றுக்கொள்ளத் தவறி விட்டோம். ஆகவேதான் அவர்கள் பொருட்டாக எந்தத் தியாகத்தையும் செய்வதில் கா இன்பங் காண முடிவதில்லை. மற்றவர்களும் வாழ்கிருர்கள் என்ற உண்மையை அன்ே வடிவான அகக் காட்சியின் மூலமாகத்தான் அறிய முடியும் அனைத்துயிர்களும் ஒன்றுதான் என்று தத்துவ சாத்திரம் கடறு பொழுது, நான் என்ற அகங்காரத்துடன் பிறர் என்பவற்றையு. ஒன்ருக்கிக் காண, நுண்மையான அத் தத்துவ சாத்திரக் கருத்து நமக்கு உதவ முடியாத கிலேயில் உள்ளது. இதனைச் செய்து முடிக்க அன்பு ஒன்றினுல்தான் முடியும். அன்பே ஆன்மாவின் இயக்க சக்தியாய், எல்லே யற்ற பொறுமை யுடையதாய், தன்னை தியாகம் செய்துகொள்வதில் இன்பங் காண்கிறது. இந்த இயக் சக்தி மூலமே தேசபக்தன் தன் காட்டின் அனைத் துலக ஆன்ம வையும், மானிடவாதி உலகத்து மக்களேயும் காண்கிருன். தொண்டின் மூலமாக வெளிப்படுகிற துன்பத்தை ஏற்று கொள்ளும் அன்புச் சமயமே ஐரோப்பாவின் சமயமாக உள்ளது அது ஒரு மனிதனை மற்ருெரு மனிதனிடம் நெருங்கச் செய்கிறது