பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முன்னுரை அவருடைய இலக்கியப் படைப்பின் பல்வேறுபட்ட துறை களே நமக்கு வியப்பை அளிப்பனவாயினும், பரந்துபட்ட இலக்கியம் அவருடைய சக்தியை முழுவதும் வாங்கிவிட வில்ல்ை. ஏறத்தாழ எழுபது வயது ஆகையில் அவர் ஓவியக் கலையை மேற்கொண்டார். என்ருலும் பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ மூவாயிாம் படங்களைத் தீட்டினர்; அவற்றுள் சில மிக உயர்ந்த தரத்தன. இவற்றையல் லாமல், சமயம், கல்வி, அரசியல், சமுதாய முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம், பொருளாதார மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கும் அவர் எழுத்து மூலம் பணி புரிந்துள்ளார். இத் துறைகளில் அவர் புரிங் துள்ள பணிகள், இந்தியாவின் மிகச் சிறந்த மக்களில் ஒருவராக அவரை ஆக்கியதுடன், மானிட இனம் முழுவதற்கும் ஒரு செய்தி யைக் கொண்டுவந்தவராகவும் ஆக்கின. அவருடைய பேராற்ற லின், அதிகம் அறிந்து கொள்ளப்படாத சில பகுதிகளே, உலகத் தாரின் கவனத்துக்குக் கொண்டு வருவதே இந்த மலரின் நோக்க மாகும். - கல்வித் துறை வல்லுநராகிய தாகூரில் தொடங்குவோம். கல்வியைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் அவருடைய அனுப வத்திலிருந்தே பெறப்பட்டவை. வேலைக்காரர்களின் கட்டுப்பாட் டில் நகரத்தில் வாழ்ந்த குறுகிய வாழ்க்கையே, குழந்தைகட்குத் தேவையான உரிமை, பரந்த இடம் ஆகியவற்றை அவர் சிறப்பாக உணருமாறு செய்தது. வாலாயமான காரியங்களேச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டதும், அவருக்கு விருப்பம் இல்லாதவற்றைக் கற்குமாறு கட்டுப்பாடு செய்ததும், கல்வி கிலேயங்களில் பயன் படுத்தப்பட்ட வழி முறைகளே அவர் வெறுக்குமாறு செய்தன. அன்றியும் தமக்கு வழங்கப்பட்ட கல்விக்கும், தம்முடைய சமுதாய வாழ்வுக்கும், பண்பாட்டு மரபுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை அவர் உள்ளத்துணர்ச்சியால் அறிந்தார். அவருடைய தந்தையார் முதன் முறையாக அவ في محمس

ரை இமயமலைக்கு அழைத்துக் சென்ற பொழுது, இயற்கையைப் பெரு வியப்டோடும் இன்ப்த் தோடும் தாம் கண்டதை அவரே எழுதியுள்ளார். குழந்தை, நல்ல உடல், மன வளர்ச்சி பெறுவகற்குப் புறக்கிணிப்பிலிருந்து விடுதலே யும், இயற்கையோடு ஒன்றி ஒட்டிய உறவும் இன்றியமையாதவை என்ற உறுதியை அவரிடம் வார்த்தன. குழந்தையின் விருப்பத் திற்குத் தக்க முறையில் ஆக்கம் அளிக்கக் கட்டிய கல்வி முறை ஒன்றை வகுக்க விரும்பினர். அந்தக் கல்வி முறை காட்டின் மரபுகள், வரலாறு ஆகியவற்றிலிருந்து தோன்றியதாய் இயற்கை

யோடு ஒன்றி ஒட்டிய தொடர்புடையதாய் இருத்தல் வேண்டும்.