பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. "தலைவன் விருப்பமே நடைபெறும் - காற்றும் மழையும் வரவேண்டியதுதான் தாமதம் , எங்க :ளுடைய சந்து முழுவதிலும், தெருவிற்குப் போகும் தூரம் வரையில், அப்படியே குளம் ப்ோலத் தண்ணிர் கின்றுவிடும். அந்த நேரத்தில் கடந்து செல்கின்றவர்கள் தங்களுடைய காலணி களைத் திலக்குமேல் குடையைப் போலத் தூக்கிப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். சங்தில் குடியிருப்பவர்களோ வென்ருல், அந்தச் சங்தில் வாழ்வதற்கு, நீர்வாழ் பிராணிகளைப் போலத் தங்களே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து என்னுடைய தலைமுடி கரைக்கின்ற வரையில் ஆண்டுதோறும் எங்களுடைய வாசலிலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்திருக்கின்றேன். இதனிடையில் அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டன. அக் காலத்தில் யந்திர சாதனப் போக்குவரத்துக்கு நீராவி மட்டுமே பயன் பட்டு வந்தது. ஆனுல் இப்பொழுதோ எனில் மின்சாரம் நீராவியை பார்த்துக் கேலி செய்கின்ற முறையில் கண்ணைச் சிமிட்டுகின்றது. அக்காலத்தில் அணுக்களைக் கண்ணுல் காண முடியாது என்ற முறையில் அணுக்கள் சித்தாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆளுல் இப்பொழுதோ வென்ருல், அதைப் புரிந்துகொள்ளவும் முடி யாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்துவிட்டது. எறும்புகள் மரணமடைவதற்கு முன்னர் இறக்கைகளை விரித்துப் பறப்பது போல, மனிதனும் ஆகாயத்தில் இறக்கையை விரித்துப் பறக்கத் தொடங்கி விட்டான். இப்பொழுதேகட்ட, ஆகாயத்தில் ஆணை செலவிட நினைக்கின்ற வல்லரசுகளுள் ஏற்படப் போகின்ற உரிமைப் போராட்டத்திற்கு, வக்கீல்கள் தங்களைத் தயார் செய்து கொண்டிருக்கிருர்கள். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வளர்த்து வந்த தங்கள் ஜடைகளே ஒரே இரவில் சீனர்கள் வெட்டித் தள்ளிவிட்டார்கள். ஜப்பானியர்களோ வெனில் கால மென்னும் கடலில் 500 ஆண்டுகளே 50 ஆண்டுகளாகக் குறுக்கி ஒரே தாண்டில் தாண்டி விட்டார்கள். ஆளுல் எங்கள் சந்தைப் பொறுத்தமட்டில், மழைத் தண்ணீரின் கொள்கலமாக அன்றிருக்த சந்து, இன்றும் அப்படியே இருந்து வருகிறது. இந்திய தேசியக் காங்கிரஸ்-க்கு அஸ்திவாரக் கல் காட்டுவதற்கு முன்பே மழைக் காலத்தில் எங்கள் சந்தில் வாழ்கின்ற பெண்கள் கீழ்க் وكالة கண்டவ்ாறு பாடுவார்கள் :