பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அனைத்துலக மனிதனை நோக்கி ' கால்களால் நடந்து செல்லும் யாத்ரீகனே: துயரம் எனும் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு எத்துணைக் காலம் பிடிக்கும் ’’’ 俱 ஆளுல், சுயாட்சி நம்முடைய பிடிக்குள் அகப்படுகின்ற கேரத்தில், நம்முடைய வாயின் எதிரே பழுத்த பழம்போல அது தொங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இன்றுங்கட்ட, நம்முடைய பெண்கள் அதே பாட்டை மழைக்கேற்ற அதே ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிருர்கள். நம்முடைய குழந்தைப் பருவத்திலிருந்து சந்தில் மழைத் தண்ணிர் கிரம்பி யோடுவதைப் பார்த்துக் கொண்டே யிருக்கிருேம். அதளுல்தான் அதில் ஒன்றும் ஆச்சரியம் ஏற்படவில்லை. எதிர் பார்த்து நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. ஆகையில்ைதான்போலும் இதுபற்றிக் கவலைப் படாமல் அப்படியே இதை ஏற்றுக் கொண்டோம். ஒரு கடிதத்தில் எழுதப்பெற்றுள்ள வரிகளில் தனிப்பட்ட முறை யில் குறிப்பிடப்படாத வார்த்தை நம்முடைய கண்களுக்குத் தப்பி விடலாம். ஆளுல் ஒரு வார்த்தையை அடிக் கோடிட்டுக் குறிப் பிட்டுக் காண்பித்தால் நம்முடைய கவனத்தை அது கட்டாயம் கவர்ந்தே தீரும். அதேபோல என்னுடைய மனமும், சித்பூர் சாலையில் சந்தின் வழியில் இரட்டையாக இடப்பட்ட டிராம் தண்ட வாளங்களில் என்னுடைய வண்டிச் சக்கரங்கள் சிக்கிக் கொண்ட போதெல்லாம் என் கவனத்தைப் பற்றி இழுத்தது, டிராம்வே கம்பெனியார் எங்களுடைய சந்தில் தண்ணிர் தேங்குவதை, அடிக் கோடிட்டு கினேவூட்டியதுபோல இருந்தது. டிராம் தண்டவாளங் களைப் பழுது பார்க்கும் நிகழ்ச்சி மழைக் காலத்தில் தொடங்' கினலும்கூட, டிராம்வே கம்பெனியார்களுடைய தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஞ்ஞானத்தில், பழுது பார்க்கும் வேலை முடிவடைவ: தாகவே காணுேம். இதனை ஏன் தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஞ்ஞானம் என்று கூறுகிருேமென்ருல், தர்க்க சாஸ்திரப்படி தொடக்கமுடைய பொருள்களெல்லாம் ஒரு முடிவு பெற்றே தீர வேண்டும். ஆளுல் தண்டவாளம் பழுதுபார்க்கும் இந்த நிலமைக்கு முடிவே இல்லையாதலின் இவ்வாறு கடறினேன். இந்த முறையில்தான் டிராம் தண்டவாளங்கள் போடுவதையும், நூற்றுக் கன்னக்கான மனிதர்கள் வெள்ளத்தோடு போராடுவதையும் பார்த்துக் கொண் டிருந்தபோது என்னுடைய உட்ம்பும் மனமும் தண்ணிரில் மூழ்கின.