பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆಶಿಖ೧೯r விருப்பமே நடைபெறும் 2 11 விடுதலை உண்மையை நாடுவதால் கம்மை நாமே விடு வித்துக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது. உண்மை அல்லா தது என்பது என்ன ? தனித்து நிற்கக்கட்டிய பொருளாக, ஒருவன், தன்னைத் தான் கருதிக் கொள்வதே உண்மை அல்லாத தாகும். இந்த மிகப் பெரிய அண்டத்துடன் தனக்குள்ள ஒற்றுமையை அறிவதும், தன்னுடைய ஜீவாத்மாவை இந்த அனைத் துலக ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கச்செய்வதும்தான் உண்மை அறிவாகும். பழங் காலத்திலுள்ள இந்தியர்கள் இவ்வளவு பெரிய உண்மையைச் சாதாரண மனிதனும் அறிந்துகொள்ளும்படியாகச் செய்தது எவ்வளவு பெரிய காரியம் என்பதை இன்றுள்ளவர் 'களாகிய நரீம் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. பழங் கால இந்தியா ஆன்மீகப் பகுதியில் எத்தகைய விடு தலையைப் பெற முயன்றதோ, அதே போன்ற ஒரு விடுதலையைத் தான் நவீன ஐரோப்பா உலகாயதப் பகுதியில் பெற முயல்கிறது. இங்குங்கூட, அறியாமை யென்பது ஒரு தளேயாகவும், அறி வுடைமை என்பது விடுதலையாகவும் இருந்து வருகிறது. விஞ் ஞர்னத்தின் உண்மைகள், தனித்துவத்திலிருந்து அனைத் துலகத் தன்மைக்கு மனித மனத்தை அழைத்துச் செல்வதுடன், தனி மனித னுடைய சக்தியை அனைத் துலகச் சக்தியோடு இணைக்க முயல் கிறது. இந்தியாவில், உலகத்தைத் துறந்து, ஆன்மீக முயற்சிகளில் ஈடுபட்ட ரிஷிகளின் காலம் நாளாவட்டத்தில் மறைந்து, அதனைத் தொடர்ந்து பெளத்த காலம் வந்தது. இந்தியா தான் கற்றிருந்த பேருண்மையை வாழ்க்கையிலிருந்து தள்ளி வைத்துவிட்டு, துறவு தான் விடுதலைக்கு மிக முக்கியமான ஒரு வழியாகும் என்று சொல்லத் தொடங்கியது. இதன் பயனுக, சட்டபூர்வமாகச் சுவர் வைத்துப் பிரிக்கப்பட்ட இரண்டு நிலங்கள் அடுத்தடுத்து இருப் பதைப் போல, அறியாமையும் அறிவுடைமையும் தனித் தனியே பிரிக்கப்பட்டு இன்று வரையில் பிரிந்தே இருந்து வருகின்றன. குறுகிய மனப்பான்மை, முரட்டுத்தனம், அறியாமை ஆகியவைகள் இந்த உலகத்தில் கிறைந்து காணப்பட்டாலுங்கட்ட, மிகப் பெரிய உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் இாண்கின்ற பெரியவர்கள் இவற்றை மறுத்துப் பேசாமல், ஒரளவுக்கு இவற்றை ஒப்புக் கொண்டே இருந்து வருகிருள்கள். ஒரு மரத் தடியில் அமர்ந்து கொண்டு ஞானி ஒருவன் அனைத்திலும் தன்னையும், தன்னில் அனத்தையும் எவன் ஒருவன் காண்கின்ருனே, அவனே