பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்பமே நடைபெறும் * 2 5 ல்யில் புறப்பட்டாலுங்கூட, கிழவியைத் தோளில் தாங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் மூச்சிழந்து தோற்க ஆரம்பித்து விட்டது. ஸ்பெயின் மக்களின் கப்பல் படை என்று இங்கிலாக் தால் தோற்கடிக்கப்பட்டதோ, அன்றே ஸ்பெயின் தேசம் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. சமய கம்பிக்கையில் எப்படிப் பழைய மரபுகள், பழக்கங்கள் ஆகிய வற்ருல் ஸ்பெயின் தேசம் கட்டுப்பட்டிருந்ததோ, அதேபோலக் கப்பல் சண்டை செய்யும் முறையிலும்கூட மரபுகளாலும், பழக்க வழக்கங்களாலும் ஸ்பெயின் தேசம், கட்டுப்பட்டிருந்தது. இங்கி ல்ாந்துக் கப்பல் படை தண்ணிர், காற்று என்ற இரண்டுடன் மிகவும் ஒற்றுமை கொண்டு எளிதாக இங்கு மங்கும் நகர்ந்த நேரத்தில் ஸ்பெயின் தேசம் பழைய சாஸ்திரீய முறைகளில் பிணிக்கப் பட்டிருந்தது. இங்கிலாந்துக் கப்பல் படையில் ஒரு மனிதன் தேவையான தகுதிகளைப் பெற்றிருந்தால் அவனுடைய பிறப்பைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், படைத் தலைவனுகக் கூட ஆக முடியும். ஆனல், அதே நேரத்தில், ஸ்பானியக் கப்பல் படையில் மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிகளை அடையமுடியும். இன்று, ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பொது மக்களும் அவர்கள் சிறுவர்களாயினும் பெரியவர்களாயினும், மாதா கோயிலின் குருட்டு அதிகாரம் தளர்ந்துவிட்ட காரணத்தால், தாங்கள் தலை கிமிர்ந்து கடக்கவும், தம்மைத்தாமே மதித்து நடந்து கொள்ளவும் சக்தி பெற்ருர்கள். சார் மன்னர் ஆட்சி செய்த ரஷ்யா போன்ற நாடுகள் மானிட சமுதாயத்தின் மேல் கொண் டிருந்த இந்த மரியாதைக் குறைவு காரணமாகத் தலைவன் இல்லாத தரிசு நிலங்கள் போல முள்ளும், புதரும் மண்டிய காடுகளாக மாறி, விட்டன. இத்தகைய நாடுகளில், மனிதர்களே, பணக்காரர் களுடைய அமீனுக்களும், பழமையினுடைய சாஸ்திர புத்தகங் களும், குருட்டு அதிகாரத்தின் பிற கருவிகளும் அவமானப்படுத் தியும் கொடுமைப்படுத்தியும் கீழ் கிலேயை அடையச் செய்தன. ஆன்மாவுக்கும், சமப்ச் சடங்குகளுக்கு முள்ள வேற்றுமை கெருப்புக்கும், சாம்பலுக்கும் உள்ள வேற்றுமை போல ஆகும் என்பதை மனத்தில் தவருமல் பதித்துக் கொள்ள வேண்டும். ஆன்மாவைக் காட்டிலும் சடங்குகள் முக்கியத்துவம் பெறும் பொழுது, ஆற்றிலுள்ள தண்ணிரைக் காட்டிலும் அங்குள்ள மணல் முக்கியத்துவம் பெறும்பொழுது, ஆற்றின் நீரோட்டம் நீங்கிப் பாலே ஆனமே முடிவாக எஞ்சுகிறது.