பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 அனைத்துலக மனிதனே நோக்கி ஒரு மனிதனிடத்தில், காட்டப்படும் அவமரியரதை, காட்டு கின்றவனுக்கு எவ்வித நன்மையும் புரியாமல், காட்டப்படுபவ னுக்கும் எவ்வித நன்மையையும் புரிவதில்லை யென்று உண்மை, சமயம் பேசுகிறது. அதே நேரத்தில், மற்ருெகு மனிதனை எவ்வாறு கொடுமையாக கடத்த வேண்டும், இல்லா விட்டால் சமயப் பிரஷ்டம் செய்ய நேரிடும் என்று சமயச் சடங்குகள் விவரமாகப் பேசுகின்றன. நம்முடைய சகோதரர்களுக்குத் தேவையற்ற துன் பத்தை உண்டாக்குவதன் மூலம், கம்முடைய ஆன்மாவையே அழித்துக் கொள்கிருேம் என்று உண்மைச் சமயம் சொல்கிறது. ஆனல், மகளின் பசியைப் போக்க வேண்டிய பெற்ருேர்களே நோக்கி, அவள் கைம்பெண்ணுக ஆகிவிட்டால், குறிப்பிட்ட நாளில் உணவு, தண்ணிர் முதலியவைகளைக் கொடுக்கக் கட்டா தென்று போலிச் சமயச் சடங்குகள் சொல்கின்றன. நம்முடைய தீய நினைவுகள், தீய செயல்கள் ஆகியவற்றுக்குக் கழுவாய் தேடும் முகமாக நற் காரியங்களைச் செய்து நம்முடைய பிழையை நினைத்து வருந்த வேண்டுமென்று உண்மைச் சமயம் சொல்கிறது. ஆளுல், அதே நேரத்தில், சூரிய, சந்திர கிரஹண காலங்களில் புண்ணிய நதிகளில் குளித்துவிட்டால் போதும் என்று போலிச் சமயச் சடங்குகள் சொல்கின்றன. உண்மைச் சமயம், கடல்களையும், மலைகளையும் தாண்டிச் சென்று பரந்த உலகத்தைப் பார்ப்பதன் மூலம் நம்முடைய மனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறது. ஆனால், போலிச் சடங்கு, கடல் கடந்து செல்வ தற்குத் தடை விதிக்கின்றது. உண்மைச் சமயம், மற்றவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாயிருப்பினும், அவர்களிடத்திலுள்ள கல்ல வற்றைப் பாராட்ட வேண்டுமென்று சொல்கிறது. ஆணுல்,ஒரு பிரா மணன் எவ்வளவு தகுதி யில்லாதவனுக இருப்பினும் அவனுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று போலிச் சடங்குகள், சொல் கின்றன. சுருங்கக் கூறுமிடத்து விடுதலையை நோக்கி உண்மைச் சமயம் அழைத்துச் செல்கின்ற நேரத்தின், அடிமைத் தன த்தை நோக்கிப் போலிச் சடங்குகள் அழைத்துச் செல்கின்றன. சமயத்திற்குக் காட்டப்படும் பக்தியில் ஒருவகை அழகு இருப் பது உண்மைதான். வெளி நாட்டிலிருந்து நம்முடைய காட்டைப் பார்க்க வருகின்றவர்கள் பலரும், புறத்தே யிருந்து இதனைக் கண்டு, இதைப் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளனர். இது எவ்வாறு உள்ள தென்ருல், ஓர் ஓவியக் கலைஞன் குடியிருப்பதற்குத் தகுதி யற்று அழிந்து போன ஒரு பழைய வீட்டை வெளிப்புறத்திலிருந்து பார்த்து