பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 அனைத்துலக மனிதனை நோக்கி அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிருர் ள். ஆளுல், பயன்படுத்துவதற்குரிய சட்ட திட்டங்களைப் பார்த்தாம், அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதற்காகவே சட்ட திட்டங்கள் வகுக்கப் பட்டனபோல் தெரிகின்றன. அளவு மீறிய கட்டுப்பாடுகள் வகுக்கப் பெற்றதுடன், கட்டுப்பாடுகளைச் சிறிதளவு மீறிலுைம் மிகக் கடுமை யான தண்டனை விதிக்கப்படுகிறது. கம்மிடையேயுள்ள குருமார்கள், பூசாரிகள், தாயத்துக்கள், மந்திரங்கள், தாய் மொழியிலுள்ள பழமொழிகள் ஆகியவை யனைத்தும் நம்முடைய கவனத்தையும், பக்தியோடு கூடிய கீழ்ப் படிதலையும் எதிர்பார்க்கின்றன. எனவே ஒரு கொள்ளேக்காரன் நம்மை எதிர்ப்பட்டால் நாம் பயன்படுத்தியே பழக்கமில்லாத அந்தத் துப்பாக்கியை உபயோகப்படுத்தி அல்லல் அடைவதைக் காட்டிலும், அவன் தரும் தொல்லேயே தேவலாம் என்றே தோன்றுகிறது. நம்மிடத்தில் அன்புடைய மக்கள், ! உங்கள் காலில் உள்ள தளைகள் இன்றுபோல் என்றும் இருக்கட்டும்’ என்று ஆசிர்வதிப்பு தோடு கூட, மற்றவர்கள் தோள்மேல் ஏறிக்கொண்டு, அவர்கள் கால்களை உபயோகப்படுத்தி நடந்து செல்வீர்களாக ’ என்றும் கூறினுல் பொருத்தமாக இருக்கும்போல் தெரிகிறது. இந்த மக்கள் நம்முடைய பழங்காலச் சமுதாயத்தின் குறுக்குச் சுவர்களையும், சட்டங்களையும் மறுபடியும் தோண்டி யெடுத்து அவற்றை வலுப் படுத்துவதையே மறு மலர்ச்சி என்று பேசுகிருர்கள். இவ்வாறு செய்வதால் வாழ்வில் ஒட்டம் அற்றுப் போவதையும், அறிவு சுருங்கிப் போவதையும் கண்டு, அவர்கள் கர்வம் கொள்கிருர்கள். இதன் பயணுகக் கோடிக் கணக்கான மக்கள் அநாதைகளாகவும், பசிப் பிணியோடும் வாட நேரிடும்போது, இவர்கள், அவர்களுக் காகப் பொறுப் பேற்றுக்கொள்ளவேண்டி நேரிடும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும். ஒன்றுக் கொன்று முரண் பட்டுள்ள இரண்டு கருத்துக்களுக்கு, ஒருவன் எவ்வளவு கெட்டிக் காரணுக இருப்பினும், தொண்டு செய்ய முடியாது. தண்ணிர் கொண்டு வருவதற்காகத் தாகமுடைய ஒருவன் வைத்திருக்கின்ற பாத்திரங்கள் அனைத்தையும் உடைத்துவிட்டு, ஆற்றுக்கும். வீட்டுக்கும் ஆகப் பலமுறை சென்று, இந்த பெருமக்கள், சல்லடையின் மூலம் தண்லர் கொண்டுவர முயல்கிருர்கள். நம்முடைய காட்டின் இன்றைய வருந்தத் தகுந்த கிலே, பிற காட்டாரின் ஆட்சியின் பயனுகவே ஏற்பட்டுள்ளது என்று கம்மில் பலரும் கொண்டிருக்கின்ற கருத்தைக் கொஞ்சம் கவனத்தோடு ஆராய வேண்டும். -