பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்பமே நடைபெறும் - 32 - ஆள்பவர்களின் சக்தியையும், ஆளப்படுவோரின் சக்தியையும் ஒன்ருக இணைபேதே ஆங்கில அரசியலின் அடிப்படைக் கொள்கை யாகும். இங்கிலாந்தில் இந்தக் கொள்கை எதேச்சாதிகாரக் கொள்கையோடு மிக நீண்ட நாட்களாகக் கடும்போர் புரிந்து வருகிறது. அத்தகைய போராட்டத்தின் வரலாறு கம்மிடமிருங்கு மறைக்கப்படவிலலை. அரசாங்கப் பள்ளிக்கூடங்களிலேயே இதை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. அதே பள்ளிக்கூடங்களில் நாம் பரீட்சை தேறுகின்ருேம் ஆதலால் இதனே நம்மிடத்திலிருந்து போக்கிவிட முடியாது. இந்த மண்ணில்தான் காங்கிரஸ் போன்ற நம்முடைய அரசியல் நிறுவனங்கள் வேரூன்றியுள்ளன. ஐரோப்பிய விஞ்ஞானத்தை நாம் கற்றுக்கொள்ளக் கூடிய உரிமை எப்படி அந்த விஞ்ஞானத்தின் இயல்பிலேயே அமைந்திருக் கிறதோ, அதேபோல ஆங்கில அரசியலை நாம் அறிந்துகொள்வதற் குரிய இயல்பை அந்த அரசியலே பெற்றிருக்கிறது. ஒரு குறுகிய அளவு எண்ணிக்கையுள்ள ஆங்கிலேயர்கள், இந்திய மாணவர்கள் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறக் கூடாது என்று சொல்லலாம். ஆனால், விஞ்ஞானமே தன்னுடைய பலத்த குரலில், எந்தச் சாதி நிறம் உடையவர்களாயினும் அனைவரும் தன்னைக் கற்று வலுவடையலாம் என்று சொல்லி, அந்த ஆங்கிலேயர்களை அவமானத்திற் குள்ளாக்குகிறது. அதே போல ஒரு சிறு எண்ணிக்கையுள்ள ஆங்கில அரசியல் வாதிகள் - அல்லது அவர்களில் பெரும்பாலோர்கட்ட இந்தியா சுயாட்சி அடை வதற்குப் பல்வேறு தடைகளே ஏற்படுத்த வேண்டுமென்று சொல்ல லாம். ஆளுல் ஆங்கில அரசியல், அவர்கள் கூறும் புத்திமதிகளை உதறி யெறிந்து ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய நிறம், சாதி என்பவை பற்றிக் கவலைப்படாமல் இந்திய அரசியலில் அவன் உரிமையைக் கோருமாறு உபதேசிக்கிறது. அறிவுத் துறையிலும், ஆன்மீகத் துறையிலும் சூத்திரனுக்கு' " எவ்விதமான உரிமையும் இல்லையென்று பழங்கால இகதியாவில் எப்படிப் பிராமணன் கூறினுகுே, அதேபோல ஆங்கில அரசியல் கிறுவனங்களில் பங்கு கொள்வதற்கு நமக்கு உரிமையில்லே கடுமையாக எச்சாக்கப்படலாம். அடியிலிருந்து நுனி بنی نالا:6 வரையில் சூத்திரனுடைய மனத்தையும் உடம்பையும் ஒடிப் பதற்காகவே, பிராமணன் வலுவான பிரிவினைச் சட்டங்களே வரன் முறையாகச் செய்திருக்கிறன். ஒரு மனிதனுடைய செயல்கள், ஒரு மரத்திலுள்ள கிளேகள் போலாகும். மரத்தினுடைய வேர்