பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்ைவ்ன் விருப்பமே நடைபெறும் 223 என்ருலும் மானிடத்தின் மேல் எனக்குள்ள நம்பிக்கையை நான் இழக்க மீரட்டேன். அன்றியும், ஆங்கில அரசியலில் அதிகா ரத்தைவிட ஒழுக்கத்திற்கு அதிக இடமுண்டு என்பதையும் கம்பு வேன். அன்ருடம் இவற்றுக்கு எதிராக எவ்வளவுதான் சான்று கள் கிடைத்த போதிலும் ஆங்கிலேயர்கள் தன்னலம், அதிகார வெறி, பேராசை, துரோகம், கோழைத்தனம், கர்வம் ஆகியவற் றுக்கு எவ்வளவுதான் அதிகமாக இடம் கொடுத்தாலும், என் னுடைய நம்பிக்கை மட்டும் தளராது. ஆங்கிலேயர்களிடத்தி லுள்ள இக் குற்றங்கள் நம்மை ஏன் வருத்துகின்றன வென்ருல், அதே குற்றங்கள் நம்மிடம் இருப்பதாலும், எளிதாக அச்சுறுத்தப் பட்டு, அதைவிட எளிதாக ஆசைக் குட்படுத்தப்படுவதாலும் நம்முடைய இருதயத்தில் பொருமை, வெறுப்பு, அவ நம்பிக்கை ஆகியவை கிறைந்து இருப்பதாலுமே இவை நம்மை வருத்து கின்றன. ஆனல், நாம் வீரர்களாகவும், பெரியவர்களாகவும், ப்ெருந் தன்மை, நற் பண்பு, நம்பிக்கை ஆகியவற்றைப் பெற்றவர் களாக வும்இருந்து, கம்முடைய பகைவர்களிடத்தில் காணப்படு கின்ற பெருந்தன்மையையும் பெற்றிருந்தால்தான் உலகியல் முறை கள் எல்லாவற்றிலும், மனப் பண்பு முறையிலுங்கட்ட அவர்களே நாம் வெல்ல முடியும், நம்முடைய பகைவர்களின் குறைகள் காரண - மாக நமக்கு எவ்வளவு புண்கள் ஏற்பட்டிருந்தாலும் இந்த வெற்றியை அடைய முடியும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சிறப்பு களைக் குறைத்து மதித்து, அவர்களுடைய குறைகளுக்கு அதிக மதிப்பை நாம் கொடுப்பதற்குக் காரணம் நம்முடைய கோழைத் தனம்தான். ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு இரண்டு கட்சிகள் இருக்கும்பொழுது அந்த இருவருடைய பலமும் சேர்வதுதான் வெற்றிக்கு வழியாகிறது. பிராமணனுடைய அதிகாரத்தை அடி பணிந்து ஏற்றுக் கொண்டதன் மூலம் சூத்திரன் பிராமணனுடைய வீழ்ச்சிக்கு ஆழமான குழியைத் தோண்டி விட்டான். வலிமை யுடையவர்களுக்கு எதிரே வலிமை யற்றவர்கள் கட்டப் பலமான எதிரிகளாக ஆகி விடுகிருர்கள். அதுபோல வலிமை யற்றவர் களின் எதிரேகட்ட வலிமை யுடையவர்கள் பலமான எதிரிகளாக ஆகி விடுகிருர்கள். அகியாயத்தை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்தில் கேவலம் மிருக பலம் மட்டு மல்லாமல் கடமை யுணர்ச்சியில் தோன்றுகின்ற திேயின் சக்தியும் பயன்படுகிறது. என்றும் தீராத போலீசாரின் அட்டுழியத்திலிருந்து காட்டைக் காப்பாற்றுவதற்கு மனத்திடமும், உடல் வலிமையும் உடைய மக்கள் பலர் தேவை.