பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆಶಿನಿಖರ್ಣಿ விருப்பமே நடைபெறும் 225 மேலேயே கட்டப்பெற்றுள்ளது. அவர்களுடைய சக்தியே நம் முடைய சக்தியாகும். உண்மையை நாம் இழந்தால் அவர்களும் இழந்து விடுவார்கள். பிரிட்டிஷ் அரசியலில் உள்ள நீதியை கம்பாமல் இருக்கக்கூடிய அளவுக்கு காம் கோழைகளாக இருந்தால், பிறகு ப்ோலீசார் கொடுமைப்படுத்துவார்கள் ; மாஜிஸ்ட் டிரேட்டுகள் கியாயம் வழங்க முடியாமல் திண்டாடுவார்கள். பெருமிதம் என்ற அந்தத் தேவதை மானிடப் பலி கேட்டுக் கொண்பிேயிருப்பாள் ; வரலாறு முழுவதிலும் காணப்படுகின்ற ஆங்கிலேய வாழ்க்கை முறையைக் கேலிக் கடத்து என்று சொல் லும்படி இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி நடைபெற்றுக் கொண் டேயிருக்கும். இப்பொழுது கான் கூறியவற்றுக்கு விடையாகக் கீழ்க் கண்டவை இருக்கக்கட்டும் : அரசியலில் ஆற்றலைக் காட்டிலும் நீதிதான் பெரிய உண்மை என்ற கொள்கை கொள்கையளவில் இருக்க லாமே தவிர, நடைமுறையில் ஆபத்தானதாகும். ஆகவே ரகசியமான சதியாலோசனை என்ற கடுமையான வழியை மேற்கொள்வது, அல்லது பத்திரிகைச் சட்டத்தின் பற்க ளேயும், நகங்களையும் எதிர்த்துப் போராடாமல் அமைதி யாக இருக்கும் எளிமையான வழியை மேற்கொள்வது என்ற இரண்டு வழிகளே நமக்கு உள்ளன.” 'உண்மையைக் கூறுமிடத்துத் தொல்லைகள் நிரம்ப இருக் கின்றன. என்ருலும் கொள்கையளவில் உண்மை யென்று நாம் அறிந்துகொண்டிருக்கின்ற ஒன்றை நடைமுறையிலும் உண்மை என்று நிரூபிக்கவேண்டும். ’ . நம்முடைய மக்களே அச்சம், பேராசை என்ற இரண்டின் காரணமாக நமக்கு எதிராகச் சாட்சியம் கூறுவார்கள். ’’

  • உண்ழைதான்! ஆனுலும் உண்மையின் வழியைக் கடைப் பிடிக்க வேண்டும். '
  • புகழ் அல்லது வெகுமானம் என்ற இரண்டினுலும் ஆசை யூட்டப்பெற்று நம்முடைய மக்களே முதுகுப் புறத்தில் கம்மை குத்தி விடுவார்கள். ’’

'அதுவும் உண்மைதான் ! என்ருலும் உண்மையைக் கடைப் பிடித்து ஒழுகவேண்டும்.’’