பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்ைவன் விருப்பமே நடைபெறும் - 229 தன்னுடைய திறத்தை எடுத்துக்காட்ட வேண்டு மென்று விரும்புவது இயலாத காரியம். வரலாற்றின் ஒரு புதிய காளில் பொழுது விடியும் பொழுது கிழக்கில் புறப்படுகின்ற சூரியன் தன்னுடைய ஒளியை மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளிலும்கூடப் பரப்புகிருன். இந்த வளர்ச்சியின் அளவு ஒவ்வொரு முறையிலும் ஒரே ஒரு அங்குலம் முன்னேறுவதாக இருப்பின் எந்தத் தேசமும் அதனுடைய இலக்கைக் கற்பாங்த காலத்தில் கூட அடைய முடியாது. பிரிட்டிஷார்கள் நம்மை நோக்கி, சுதந்தரம் பெறுவதற்குத் தகுதி யிருந்தாலொழிய எந்தத் தேசமும் சுதந்தரமாக இருக்கக் கூடாது என்று கூறுகிருர்கள். இது உண்மையாக இருக்குமேயானல் எந்த ஒரு தேசமும் இன்று சுதந்தரமாக இருக்க முடியாது. அவர் களுடைய ஜனநாயகத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள் கிருர்கள். ஐரோப்பாவிலுள்ள பொதுமக்கள் பல்வேறு விதமான பெரிய குற்றங்களைச் செய்கிருர்கள் எனினும் அதனைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. இத்தகைய குற்றங்களே அவர்கள் செய்கின்ற வரையில் அவர்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கக்கட்டா தென்று யாரேனும் ஒரு சர்வாதிகாரி கூறுவானேயானல், அப்பொழுதும் கூட இந்தக் குற்றங்கள் இருந்தே தீரும். அன்றியும் இந்தக் குற்றங் களைப் போக்குவதற்குரிய இயல்பான ஒரே வழியும் அடைக்கப் பெற்றுவிடும். - கம்முடைய சமுதாய வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கை யிலும் காணப்படுகின்ற பல்வேறு குற்றங்களையும் நாம் மறைக்க விரும்பவில்லை; அப்படி விரும்பினுலும் அதில் வெற்றி பெறக் கூடாது. என்ருலும்கூட, சுயாட்சியை நாம் விரும்புகிருேம். என்னுடைய அறையில் நான்கு மூலைகளிலும் நான்கு விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது அதில் ஏதோ ஒரு விளக்குக் குறைந்த அளவில் எரிகிறது என்ற காரணத்திற்காக மற்ருெரு விளக்கை ஏற்றும் உரிமை எனக்கு மறுக்கப்படக் கட்டாது. இதில் முக்கியமானது எனனவென்ருல், எந்த ஒரு மூலேயி லிருந்தாயினும் எந்த ஒரு விளக்கில் இருந்தாயினும் என்னுடைய விளக்கைப் பற்ற வைக்க வேண்டு மென்பதுதான். மானிட சமுதாயத்தன் ம பெரும் விளக்கு விழாவில்' எந்த ஒரு தேசமும் தன்னுடைய விளக்குகள் அனத்தையும் ஏற்றியதாக இது வரைக் காணவில்லை என்ருலும், விளக்கு விழா நடந்து கொண்டேதான் இருக்கிறது. நம்முடைய விளக்குச்சிலகாலத்திற்குமுன்பு அணந்துபோனபடியால் இப்போது