பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 அனைத்துலக மனிதனே நோக்கி இங்கிலாந்தின் விளக்கிலிருந்து அதை மறுபடியும் பற்ற வைக்க விரும்புகிருேம். இதனுல் எவ்விதமான மனக் கசப்பும் ஏற்படப் போவதில்லை. இதல்ை இங்கிலாந்தின் விளக்கு ஒளி குறைந்துவிடப் போவதில்லை. அதன் எதிராக அது திருவிழாவை இன்னும் ஒளி யுடையதாக ஆக்கும். - - - இன்னும் கம்பிக்கை கொள்வதற்குரிய காரணங்கள் இருந்து வருகின்றன. அக் காரணங்கள் பிரிட்டனிலும் நம்மிடத்தும் இருக் கின்றன. வங்காளத்திலுள்ள மக்களே நான் மரியாதையோடு போற்றுகிறேன். வங்காள இளைஞர்கள் கிழக் கோலம் என்ற முக மூடியைக் கடன் வாங்கிப் போட்டுக்கொண்டு எப்போதும் அறிஞர் கள்போல் காட்சியளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலேய மக்களிலும் பெரிய ஆன்மாக்கள் சிலரை நான் அறிவேன். ஆங்கி லேய வரலாறு என்ற மரத்திலிருந்து பயன்தரும் பழங்கள் சிலவற்றை - இந்தியாவுக்குக் கொணரவே அவர்கள் விரும்புகிருர்கள். நம்முடைய காட்டிலும்கூட அரசாங்கத்தார் கொடுக்கும் தண்டனைகளையும், நம் முடைய மக்கள் தருகின்ற ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் ஏற்றுக் கொண்டு தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்கின்ற ஆண்மை யோடு கூடிய மனத் திடம் வாய்ந்த மக்கள் பலர் தேவை. என்றும் இளையதும், எப்பொழுதும் விழித் திருப்பதுமாகிய இந்தியா என்ற தெய்வம் நம்முடைய ஆன்மாவை அறை கூவி அழைக்கின்றனது. அளத்தற் கரியதாய், வெல்ல முடியாததாய், உள்ள நம் ஆன்மா கித்தியத்துவத்திற்கு, மாற்ற முடியாத உரிமையைப் பெற்றுள்ளது. இப்பொழுது அதனுடைய முகம் புழுதியில் கிடந்து மங்கினலும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங் கள், கண்மூடித்தனமான அரசியல் அதிகாரங்கள் ஆகியவற்றின் கீழ் அது கிடந்து நசுக்குண்டாலும் இந்த உரிமை என்றும் அதனிடம் உள்ளது. நமக்கு கொடுக்கும் அடியின் மூலமும் வழங்கும் அருளின் மூலமும் தன்னை உணருமாறு இந்தியத் தெய்வம் விரும்பி அழைக்கின்றது. - - இன்று, மனிதனுடைய உலகம் எத்துணேப் பெரியது என்பதை யும் மனிதனுடைய வரலாறு எவ்வளவு உயர்ந்தது என்பதையும் நாம் தெளிவாகக் காண்கிருேம். மனிதனிடத்தில் 'பூமன்' என்று சொல்லப்படும் பரமாத்மாவை இன்று நாம் காண்கிருேம். சக்தி என்ற வண்டியில் ஏறி முடிவின்மை என்ற ராஜ ப்ாட்டையில் அவன் செல்கிருன். நோய், துன்பம், ஆபத்து, மரணம் ஆகியவை அவனே ஒன்றும் செய்ய இயலாது. அனைத் துலக இயற்கைச் சக்தி