பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நில்ையம் 239 முறையில் கையையும், காலையும் அடித்துக்கொண்டு குட்டையைக் குழப்பும்பொழுதுகட்ட, இவ்வாறு தன்னுடைய பலத்தை வெளியிடு வதில் ஒரு சிறப்பு இருக்க வேண்டுமென்று கருதும் தவருன எண்ணத்தைக் கைவிட்டதாகவும் தெரியவில்லை. III சேதனப் பொருள்கள் அனைத்துமே, நெருப்பைப் போல, தங்கள் வடிவுக்கு அப்பாற்பட்டும் வாழ்கின்றன. எனவே சிறிய உடம்பு ஒன்றும் பெரிய உடம்பு ஒன்றும் அவைகளுக்கு உண்டு. சிறிய உடம்பைக் கண்ணுல் பார்க்கலாம் ; கையால் தொடலாம்: பிடித்து வைத்துக் கொள்ளலாம். ஆனல் பெரிய உடம்பு அளவில் கட்டுப்படாததாய், குறிப்பிட்ட எல்லேயுள் அடங்காததாய், காலம், இடம் இரண்டிலும் விரிந்து கிற்கும். பிற நாட்டுப் பல்கலைக் கழகங் களேக் காணும்பொழுது அவற்றின் சுருங்கிய உடம்பை அதாவது கட்டடங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள், விதி முறைகள், பாடத் திட்டங்கள் ஆகியவற்றைமட்டும் காண்கிருேமே தவிர, அவற்றின் விரிந்த பகுதியைக் காண முடிவதில்லை. ஆனல் தேங்காயின் பருப்பு தேங்காய் முழுவதிலும் பரவியிருப்பதுபோல, ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய பல்கலைக் கழகம் என்பது அவர்களுடைய சமுதாயம், பாராளுமன்றம், இலக்கியம் என்பவற்ருேடு அல்லாமல் அவர்கள் சமுதாயம் ஈடுபடுகின்ற எல்லாச் செயல்களையுமே ஊடுருவி கிற்கிறது. அவர்களுடைய கருத்துக்கள், அவர்களுடைய நூல்களில்மட்டு மல்லாமல், உயி ரோடு வாழ்கின்ற மக்களிடத்திலும், அந்த எண்ணங்களைச் சிந்தித் துத் திறனுய்வு செய்து ஒப்பிட்டு வழங்கக் கட்டிய பண்பாட்டிலும், அமைந்து கிடக்கின்றன. அந்த ஆசிரியர்களையும், மாணுக்கர்களை யும் ஒன்ருக இணக்கிற ஒரே ஊடுகிலே அவர்களுடைய உறவு வழி களே ஒளி பொருந்தியதாய்ச் செய்கிறது. சுருங்கக் கூறுமிடத்து, அவர்களுடைய கல்வி, அவர்களுடைய மனத்தையே கிலேயான விக்னமாகவும், அவர்களுடைய பண்பாட்டையே கிலேயான ஆதாரமாகவும், அவர்களுடைய சமுதாய வாழ்க்கையை கிலோன சிம்பாய்க்கம் இடமாகவும் கொண்டு வளருகிறது. மனம், வாழ்வு, பண்பாடு ஆகியவற்றி னிடையே யுள்ள இந்தச் சேதன ஒற்றுமை, உலகத்தின் பல்வேறு இடங்களில், பல்வேறு காலங் களில் காணப்படுகின்ற உண்மைகளை யெல்லாம் எடுத்து அவர்களுடைய பண்பாட்டில் இவற்றை ஒன்றவைக்கின்ற் - சக்தியைப் பெறுகின்றது. -