பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 245 சாதன முறையில் கல்வி கற்பிக்கப்பெற்றதாகும். அதன் பயனுகக் கிளிப் பிள்ளைகளே தோன்றிஞர்கள். வளமான கல்வி வேண்டுமானுல் பிற மொழியைப் போதனு மொழியாகக் கொண்டு அதைப் பெற முடியாது. இத்தகைய ஒரு செய்கை கம்முடைய காட்டைத் தவிர வேறெந்த காட்டில் நடைபெற்றிருந்தாலும் ஆபத்தான வதந்தி என்றே இதனைக் கருது வார்கள். இவ்வாறு போதிக்கப் பெற்ருல் பிறநாட்டார் அதற்குச் செவி சாய்க்காமல் உறங்கிப் போய்விடுவார்கள். நம்மைப் பொறுத்தவரை பகைமை யுணர்ச்சியைத் தூண்டி விட்டு, இன்னும் சொல்லப் போனுல் ஒரு ரத்த விருத்தி மருந்தைப் போல அது வேலை செய்யும். பயனற்ற ஒன்றைப் பயனுடையது போலப் பேசுவதால் அதிகப்படியான ஒரு பயன் கிடைக்கிறது. ஆகவேதான், ஆங்கில மொழியின் மூலமாகப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டு மென்று நம்மைக் கட்டாயப்படுத்தும் பொழுது கதவை இடிப் பதிலும், சாவியைப் போட்டுத் துழாவுவதிலும் வாழ்க்கையின் சிறந்த பகுதி கழிந்து விடுகிறது. அறையி னுள்ளே நமக்குரிய விருந்து தயாராகக் காத்துக் கொண்டிருக்கலாம். என்ருலும்கூட, உள்ளே போவதற்குரிய தடைகளும், கால தாமதமும் நம்முடைய பசியைப் போக்கி விடுவதுடன், இவ்வாறு நீண்ட காலம் பசியோடு இருப்பதனுல் கம்முடைய வயிறு சாசுவதமாகக் கெட்டும் விடுகிறது. அணுவசியமான இலக்கணத்தில் உழல்வதும், பகுத்தறிவுக்குப் பொறுத்த மற்ற முறையிலுள்ள எழுத்துக்களே உச்சரிப்பதிலும் எல்லே யில்லாத காலத்தைச் செலவழித்து இறுதியாகக் கருத்துக் களாகிய உணவு வரும்போது அதன் மேலுள்ள ஆசையே போய் விடுகிறது. மழை இல்லாத ஒரு பாலேவனத்தில் மணற் பாங்கான பூமியில் ஒரு மரத்தை முளைவிக்க வேண்டுமானுல் அந்த விதையை மிக நீண்ட தாரத்திற் கப்பாலுள்ள மற்றெரு காட்டிலிருந்து பெறுவதோடு, அங்கு காட்டிலுள்ள மண் வளத்தையும், தண்ஃைரை .ே கடன் வாங்க நேரிடும். என்ருலும், இவ்வளவு கஷ்டங்களையும் எடுத்துக் கொண்ட பிறகும்கூட, அந்த மரம் நன்கு வளர்ச்சி யடையாமல் குன்றிப் போய் கிற்கிறது. ஒருவேளை அது பழுத்துப் பலன் தந்தாலுங் கூட அந்தப் பழத்திலுள்ள விதைகள் நன்கு முற்றி யிருப்பதில்லை. நம்முடைய பல்கலைக்கழகங்களில் நமக்களிக்கப்படும் கல்வி, ஏதோ இங்கே ஒரு ಹಿ೦೧ುಣಹಿ. இருப்பதாக கினைத்து அதை மாற்றுதற் காகவே அக் கல்வி கொடுக்கப்பெறுவதுபோல் தெரிகிறது.