பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அனைத்துலக மனிதனே நோக்கி கூட்டுறவுகளால் நம்முடைய எண்ணத்திலும், ஆக்கத்திலும் சுதங் திரம் ஏற்படாதபடி செய்து விடுகிறது. ஆங்கிலத்தைப் பயன் படுத்துவதனல், கம்முடைய மனம்தன்னையும் அறியாமல் ஊக்கத் தைத்தேடி மேற்கே செல்கிறது. அந்த மேற் நிசையோடு நாம் ஒரு காளும் அந்தரங்கத் தொடர்பு கொள்ள முடியாது. அதன் பயனுக, நம்முடைய கல்வி பயன் விளக்காததாய், அப்படி ஒருவேளை விளைத் தாலும் பொருத்த மற்ற பயனேயே விளைவிக்கக் கூடியதா இருக்கும். கம்மிடத்திலுள்ள பல்வேறு மொழிகளையும் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆனல் கம்முடைய பண்பாட்டு மொழியாக மிக நீண்ட தூரத்திற் கப்பால் இருக்கின்ற ஒரு தேசத்தின் மொழியைக் கடன் வாங்கி, அதன் பயணுக நம்மிடத்தில் இருக்கின்ற ஓடிச் செல்லும் ஆற்றை, ஓடாத ஆழமில்லாத, குட்டையாக மற்றுவதால் ஏற்படக் கூடிய தீய பலனைக் கண்டு காம் அஞ்ச வேண்டும். IX ஆகவே, நாம் பெற் வேண்டிய இந்தியக் கல்வியைத் தருகின்ற நிறுவனங்கள், பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி யிருக்கும் பள்ளிக்கட்டங்கள் கல்லூரிகள் ஆகியவற்றை விட்டு, அப்பால் இருக்க வேண்டும். பயனற்ற இந்த யந்திரங்கள் கம் முடைய நீதிமன்றங்களிலும், அலுவலகங்களிலும், சிறைச்சாலை களிலும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளிலும் இன்னும் நம்முடைய நாகரிகத்தை வெளியிடும் ஆடம்பரப் பகுதிகளிலும் இடம் பெற்ட்டும். - - நம்முடைய நாடு பழத்தையும், கிழலையும் விரும்பினுல் சுண்ணும்பாலும், செங்கல்களாலும் கட்டப்பெற்ற கட்டிடங்களை விட்டொழிக்க வேண்டும். பழங்கால மாளுக்கர்கள் வேத காலத்தில் காட்டில் வாழ்ந்த ஆசிரியர்களைத் தேடிச் சென்று பெற்றதுபோல காமும் செனறு, கம்முடைய உயிர்ச் சக்தியைப் வளர்த்துக் கொள்ள வேண்டு மென்று தைரியமாகச் சொல்வதற்கு நமக்கு ஏன் கெஞ்சுரம் இல்லை ? இவ்வாறு இல்லாவிட்டாலும், பெளத்த காலத்தில் நாளந்தாவிலும், தகூடிசீலத்திலும் இருந்த பள்ளிக்கட்டங் களப் போல அவைகள் இல்லாவிட்டாலும், கொஞ்சங் கொஞ்ச மாகச் சீரழிந்து கொண்டிருப்பினும் இந்தக் காலத்தில்கட்ட உயி ரோடிருக்கின்ற டோல்கள்', ' சதுஸ்பாதிகள் ஆகியவற்றி லாவது சென்று ஏன் நாம் கல்வியைப் பெறக் கூடாது?