பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இந்தியப் பண்பாட்டு நிலையம் 251. அதனே ஒரு பல்கலைக் கழகம் என்று அழைக்கக்கூட நாம் அஞ்சவேண்டும். அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே, அதை ஒப்பிட்டுப் பார்க்கவும், வருந்தத் தகுந்த முறையில் பிரதி செய்யவும் நம்மையும் அறியாமல் எண்ணத் தோன்றுகிறது. நூற்றுக் கணக்கான கைகளின் மூலம் சக்தியை வெளிப்படுத்து கின்ற ஒரு பெரிய கருவியைப்போல இதனை ஆக்கி, காட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு வயதுடையவர்களேயும் அதனிடத்தில் ஈர்த்து, அவர்களுக்குப் பல்வேறு வகையான கல்வியையும் அளித்து, அதன் பயணுக முழு இந்தியப் பண்பாட்டை உயிர்ச்சக்தி யுள்ளதாக ஆக்க வேண்டும். Χ அலகாபாத்திலுள்ள ஆங்கில - வட்டார மொழிப் பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஒரு மாணவனைப் பார்த்து, ஓர் ஆற்றை வருணிக்குமாறு கேட்டார்கள். அந்தக் கெட்டிக்காரப் பையன் சிறந்த முறையில் அதற்கு விளக்கம் தந்தான். ஆணுல், அவன் எந்த ஆற்றைப் பார்த்தான் என்று கேட்டபோது, கங்கையும் யமுனேயும் கூடுகின்ற திரிவேணி சங்கமத்தில் அவன் குடியிருந்த போதிலும், தான் எந்த ஆற்றையும் பார்த்ததில்லை யென்று அவன் பதில் கூறினன். அவன் அடிக்கடிப் பார்த்துப் பழகிய அந்த ஆறும், ஊரும் மிக உயர்ந்ததாகிய பூகோள சாஸ்திரத்தில் இடம் பெறமுடியா தென்று கருதின்ை போலும் அவனுடைய பிற் காலத்தில், அந்தப் பெரிய பூகோள சாஸ்திரத்தில் அவனுடைய நாட்டுக்குக்கூட ஓர் இடமுண்டு என்பதையும், அந்த காட்டில்கூட ஆறுகள் உண்டென்பதையும் ஒருவேளை தெரிந்து கொண்டிருக் கலாம். ஒருவேளை யாராவது வெளி நாட்டான் அவனிடத்தில் வந்து, அவனுடைய தேசமும் பெரிய தேசம்தான் என்றும், இமய மலை மிகப் பெரிய மலை என்றும், சிந்து, கங்கை, பிரமபுத்திரா ஆகிய கதிகள் மிகப் பெரிய நதிகள் என்றும் சொல்கின்ற வரையில், அலன் அதுபற்றித் தெரியாமல்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு சொல்லப்பட்டால், அதல்ை ஏற்பட்ட அதிர்ச்சி தாங்காமல் அதற்கு எதிர் நிகழ்ச்சியாகவும், இதுவரையில் அவனுக்கிருந்த அறியா,ை யின் காரணமாகவும், அவன் வீட்டுக் கடரையின் மேல் ஏறிக்கொண்டு உலகத்திலேயே தன்னுடைய காடுதான் சிறந்த சொர்க்கம் என்றும், மற்ற நாடுகளெல்லாம் நாடுகளே அல்லவென்றும் கூறலாம். அவனு டைய உலகத்தைப் பற்றிய பழைய அறிவு, அவனுடைய அறிய மையின் காரணமாக, தவருக இருந்தது. ஆனல் பின்னர்