பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலயம் 261 இலக்கியப் பகுதியையும் நாம் நன்கு காணுகின்ருேம். எனவே, நவீனப் பண்பாடு என்பது பற்றிய நம்முடைய கருத்துக்கள் எல்லாம் இலக்கணம், சோதனை சாலை என்ற இரண்டு எல்லேக்குள் அமைந்து விடுகின்றன. இதன் பயணுக மனிதனுடைய முருகியல் (aesthetic) வாழ்க்கையையே மறந்து விட்டு அதில் முள்ளும் கல்லும் மண்டுமாறு விட்டுவிட்டோம். எனவே, இசையும் நுண் கலேயுமே தேசீய சுய வெளிப்பாட் டைக் காட்டுகின்ற மிக உயர்ந்த வழிகள் என்பதையும், இவை இல்லையானல் அந்த மக்கள் சுய வெளிப்பாடு இல்லாமல் சமைந்து விடுவார்கள் என்பதையும் மறுபடியும் வலியுறுத்த விரும்புகின்றேன். விழிப்புடைய நம்முடைய புறமனம், வாழ்வின் புறப் ப்குதிகளே மட்டுமே பற்றி கிற்கின்றது. குவிந்துள்ள கம்முடைய அக மனம் எல்லே காண முடியாத ஆழ முடையது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துள்ள ஞானம் அங்கேதான் தழைத்து கிற்கின்றது. நம்முடைய கண்ணெதிரே மாறி மாறி நடைபெறு கின்ற நிகழ்ச்சிகளில் கம்முடைய புற மனம் தன்னைத் தான் காணு கின்றது. ஆனல் கம்முடைய ஆன்மா தங்கி யிருக்கின்ற அக மனமும்கூடத் தன்னே வெளிப்படுத்திகொள்ளக் கூடிய சூழ்நிலை களைப் பெற வேண்டும். இந்தச் சூழ்நிலைகள் கவிதை, இசை, கலேகள் ஆகியவை தாம். இங்கேதான் மனிதனுடைய முழு ஆளுமையும் வெளிப்பாட்டைக் காணுகின்றது. , மர வியாபாரி ஒருவன் மரத்தின் சிறு கிளேகளும், பூக்களும் மரத்திற்குரிய அர்த்த மற்ற அலங்காரங்கள் என்று கினைக்கலாம். ஆனல், இந்தக் கிளேகளேயும் பூக்களையும் வெட்டி விட்டால் மரமும் கூடவே பட்டுப் போகும் என்பதை அவன் அறிய வேண்டும். - மொகலாயர்கள் காலத்தில் இசையும், கலேயும் அரசருடைய ஆதரவைப் பெற்றிருந்தன. இது ஏனென் ஆல், ஆட்சிக்காக மட்டும் இந்தியாவில் வாழாமல் அவர்கள் முழு வாழ்க்கையையும் இங்கேயே கழித்தார்கள். மனிதனுடைய முழு வாழ்வின் முழுத் தன்மையிலிருந்துதான் கலை பிறக்கிறது. நம்முடைய ஆங்கில ஆசிரியர்கள் இடைத் தங்கலாக இங்கே வந்தருக்கின்ற பறவைகள். கம்மிடத்தில் அவர்கள் குரல் எழுப்புகிருர்களே தவிர, பாட முடிய வில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில், தேசப் பிரஷ்டம் செய்யப் பெற்றவர்களைப் போன்று இந்த காட்டில் இருப்பதால் அவர்களுடைய மனம் இங்கு லயிப்பதில்லை. அவர்களுடைய கலைக்கும் இசைக்கும்.