பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முன்னுரை ஆண்களும், பெண்களும் கிராமங்களை விட்டுவிட்டு நிகரங்களில் குடியேறுகின்ருர்கள். இது ஒரு வருந்தத் தகுந்த சூழ்நிலை என்றும், இதை மாற்ற வேண்டுமாயின் கிராம வாழ்க்கையையே மாற்றி யமைக்கவேண்டும் என்றும் தாகூர் கருதினர். கிராமமும் நகர மும்’ என்ற கட்டுரையில் மேடுைகளில் வளர்ச்சியடைந்துள்ள நாகரிகத்துக்கும் பழங்கால இந்தியாவில் காணப்பட்ட பண்பாட்டுக் கும் இடையே உள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளார். இந்தியப் பண்பாடு, கிராம அடிப்படையில் அமைந்ததோடு அல் லாமல், மனிதனுடைய முழு வளர்ச்சிக்கு இயற்கையும் தேவை என்பதை அறிவுறுத்தி வந்தது. அவருடைய கருத்துப்படி, ஐரோப் பாவின் பிழை, அவர்கள் இயற்கையை வெல்லவேண்டும் என்று கினைப்பதில்தான் அடங்கி இருக்கிறது. இயற்கையோடு ஒட்டி ஒன்றலைக் காண்பதே அறிவுடைமையாகும் என அவர் கருதினர். வட அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் அங்குள்ள காடு களே அழித்ததையும், இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள் காடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றை முனிவர்களும், ஞானிகளும் வாழும் தபோவனங்களாக மாற்றியதையும் ஒப்பிட்டுக் காட்டுகிருர், கால தேவனை பின்னேக்கிச் செலுத்த முடியாதென்பதைத் தாகடர் மிக இளமையிலேயே அறிந்துகொண்டார். சமுதாயமும் அரசாங்கமும்’ என்ற கட்டுரையிலும், தலைமை உரை யிலும் வன்மையுடைய ஆண்களும், பெண்களும் கிராமங்களை விட்டு நகரங்கட்குக் குடிபெயர்ந்து போவதை, அவர்களைக் கண்டிப்பதன் மூலம் தடுக்க முடியாதென்றும், கிராம வாழ்க்கையை உயர்த்திப் பேசுவதனலும் செய்ய முடியாதென்றுங் கூறியுள்ளார். கிராமத் திற்கும் நகரத்திற்கும் இடையே உள்ள தாரதம்மியத்தைக் குறைப் பதற்குக் கிராம வாழ்க்கையை மாற்றியமைப்பதே சிறந்த ഖഴ്സി என்றும், அதன் மூலமே இந்த இரண்டிற்கும் உள்ள வேற்றுமை யைப் போக்க முடியுமென்றுங் கூறியுள்ளா. கல்வி அளிக்கும் வசதிகளைக் கிராமங்கள் பெறவேண்டும். மேலும், அதன் பயனுக சுகாதாரம், அவர்கள் கருத்துக்களை வெளியிடும் பேக் கசிலை ஆகியவற்றைக் கிராமத்திலிருந்து புறப்படுமுன் அவர்கட்கு அளிக்கவேண்டும். இளைஞர்களேயும், இளம் பெண்களே யும் நகரங் கட்கு அழைக்கும் வசதிகளைக் கிராமங்களில் ஏற்படுத்தி, தங்கள் கருத்துக்களே நிறைவேற்றக்கூடிய வாய்ப்புக்களே அவர்கட்கு அளித்தால் அப்போது நகரங்களை நோக்கி அவர்கள் படை எடுப் பது கிற்கும், τα