பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 279 ஒட்டுவ்து போலவும், இரண்டு துண்டு மரக் கட்டைகளே ஸ்குரூ ஆணி வைத்து ஒட்டுவது போலவும், மனிதர்களே ஒட்ட முடியாதாகலின், ஆக்க ஒற்றுமை ஒன்ருல் மட்டுமே ஆன்மீக ஒற்றுமையில் அவர்களே இனக்க முடியும். மேட்ைடார் மனிதர் களே இயந்திரங்கள் போல் நடத்தி அதஞல சம்பாதித்த எல்லே யற்ற செல்வத்திற்கு அளவே இல்லை. மலே போன்ற பொருள் களைத் தயாரித்து, உலகச் சந்தைகளில் விற்று, அதன் பயனுக ஆகாயத்தை முட்டும் வீடுகளைக் கட்டியுள்ளனர். அன்றியும் சமு தாயத்தின் எல்லாப் பகுதிகளிலும் கல்வியைப் பரப்பியும், மருத்துவ மனைகளே அனைத் திடங்களிலும் கட்டியும், கோடிக் கணக்கானவர் கட்கு வாழ வழி வகுத்துக் கொடுத்தும் இன்னும் பல்வேறு வகை களில் மனித இனத்திற்கு நன்மை புரிந்துள்ளனர். இது ஏன் கடை பெற்றது எனில் புற உலகைப் பொறுத்தமட்டில், யந்திரத்திற்கு, அதற்கே உரிய மெய்ம்மை உண்டு. ஆளுல் அதனைப் போற்று கின்றவர்கள், விரைவில் பயன் காணவேண்டும் என்னும் வெறி பிடித்து மேலும் மேலும் பலன விரும்புகின்றனர். அவர்கள் பேராசை எவ்வளவுக்கு அதிகப்படுகிறதோ அவ்வளவுக்கு சக மனிதர்களைக் குறைத்து மதிக்கவும் தயாராகி விடுகின்றனர். பேராசை என்பது தீய உணர்ச்சியாகு மாகலின் அதனிடம் ஆக்கம் இல்லை. மனித நாகரிகத்தின் அடிப்படைச் சக்தி பேராசையாக அமையும் பொழுது மனிதனுடைய ஆன்ம வளர்ச்சி வலுக் குறைந்து போகிறது. அத்தகைய நாகரிகம், உலகச் செல் வம், வலிமை, வளம் ஆகியவற்றை அதிகமாகத் தரத் தர மனித னுடைய ஆன்ம பலம் வலி குன்றி விடுகிறது. ஒரு கோட்டினல் மட்டும் ஒவியம் ஆவதில்லை; பல கோடுகள் இணைவதாலேயே ஓவியம் தோன்றுகிறது. குட்டையும், கெட்டையு மான கோடுகள் ஒன்றுடன் ஒன்று இணைவதால்தான் அவற் றின் ஒன்றல்தன்மையில் ஓவியம் ஏற்படுகிறது. லே நிறக் காகிதத்தில் வீடு கட்ட எழுதிய வரை படத்தை ஒவியம் என்று யாருங் கூறுவதில்லை. அதில் காணப்படும் கோடுகள் ஒன்றுக் கொன்று'ஆன்மீகத் தொடர்புடையவை அல்ல. புறத் தேவைக்கு ஏற்ப வரையப்பட்டவை அவை. ஒவியம் என்பது ஆக்கல் செயல்; வரை படம் என்பது கட்டுக்கோப்பைக் க்ாட்டுவது. பேராசை பிடித்த வியாபாரிகள் செல்வாக்குடன் இருக்கும் ஒரு சமுதாயம், ஓவியத்தின் இயல்புகள் எதுவும் இல்லாத பெரிய வரைபடம் போன்றது; அது மக்களின் இடையே