பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 அனைத்துலக ഥഒിജ് நோக்கி உள்ள ஆன்மீகத் தளையை வலு விழக்கச் செய்கிறது. செல் வமே அத்தகைய சமுதாயத்தின் வாகனம் , செல்வமுடை யவனே வாகனத்தை ஒட்டுபவன் , சாதாரண மக்களே அங்த வாகனத்துடன் வலிய சங்கிலிகளாற் பிணக்கப்பட்டு அதனை இழுத்துச் செல்கின்றவர்கள். அந்த வாகனம் பெரிய சப்தத் துடன் செல்வதைத்தான் நாகரிகம் வளர்வதாகக் கூறுகின் றனர். பொருளைச் சேர்க்கும் இயல்பாகிய இந்தத் தெய்வத் தின் வெற்றி ஊர்வலம் பொதுமக்களுக்கு எவ்வித மகிழ்ச்சி யையும் தருவதில்லை ; ஏனென்ருல் இந்தத் தெய்வத்திடம் மக்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை. புறக் கட்டுப்பாடு ஒன்ருலேயே மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டால் அதனை எதிர்த்து அவர்கள் கலகஞ் செய்வார்கள். இன்று ஐரோப்பிய ஆகாயத் தைக் கப்பிக் கொண்டிருக்கிற சமுதாயப் புரட்சி மேகத்தைப் பார்த்தாலே இது நன்கு விளங்கும். பழங்கால இந்தியா சமயத்தின் சாரத்தை விட்டுவிட்டு அதன் வடிவத்தை மட்டும் கொண்டு ஒற்றுமைப்படுத்த முயன்றதால் அதன் சக்தியை இழக்கச் செய்தது. அதேபோல, இன்றைய ஐரோப்பா, கல்லொழுக்க ஆன்மீகச் சட்டங்கள் மூல மல்லாமல், சமுதாய, பொருளாதாரச் சட்டங்கள் மூலம் மக்களே ஒற்றுமைப்படுத்த முயன்று முடிவில் அதன் கட்டுக்கோப்பைக் கலைக்கிறது. இந்த இரண்டு வழி களுமே மனித ஆன்மாவைக் கணக்கில் எடுத்துக் கொள் ளாமல், ஆன்மீக உண்மையுடன் தொடர்பு கொள்ளாமல், செய்யப்பெறும் காரியங்களாகும், - ஆன்மீக உண்மை என்பது யாது? கடவுளும் தாமும் ஒன்றே என்று ஏசுநாதர் கூறினர். அதுவே ஆன்மீக உண்மை. ஒரு தந்தையும் மைந்தனும் ஒன்றே என்று கடறுவதில் உண்மை யான ஒற்றுமையுள்ளது. ஆனல் தேயிலைத் தோட்ட மேலாளருக் கும் அங்குள்ள கூலிகட்கும் எவ்வித உறவு இருப்பினும் அதில் உண்மை ஒற்றுமை இல்லை. - - - ஐரோப்பிய நாகரிகத்தின் இருதயத்தில் கொலு வீற்றிருக்கும் பேராசையை நான் மிகவும் கண்டித்துள்ளேன். பேராசையை ஏன் கண்டிக்க வேண்டும்? ஏனென்ருல் அது உண்மையிடம் அழைத் துச் செல்வதில்லை. இவ்வாறு ஈசா உபநிஷதம் கூறுகிறது.” உண்மையைப் பற்றித் தங்கட்குக் கவலை இல்லை என்றும், இன்பம் ஒன்றே தங்கள் குறிக்கோள் என்றுங் கூறுபவரை கோக்கி உப கிஷதங் கூறுவதாவது : கன்ருக மகிழ்ச்சியை அனுபவியுங்கள்;