பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 28 I. ஆளுல் உண்மை யில்லாத விடத்தில் இன்முபம் இல்ல” என்" அந்தக் கேள்வி இப்பொழுது எழுகிறது. 'அந்த உண்மை என்பது என்ன ? இந்தக் கேள்விக்கு வரும் விடை, இந்த உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் கடவுளால் மூடப்பெற் றுள்ளன என்பதே யாகும். இந்த உலகமே முடிவான உண்மையாக இருக்குமாயின், இந்த உலகத்தின் அப்பால் வேறு ஒன்றும் இல்லாதிருப்பின், செல் வத்தைப் பெறுதலே மனிதனின் உயர்ந்த தொழிலாகவும், பேரா சையே அவனுடைய திருப்தியின் காரணமாகவும் இருந்திருக்கலாம். ஆளுல் மிக உயர்ந்த உண்மை என்னவென்ருல், ஆண்டவனே அனைத்திலும் கிறைந்துள்ளான் என்பதாகும். ஆகவே, ஆன்மா வில் உள்ள அந்த உண்மையை அனுபவிப்பதே மனிதனின் தலையாய செயற்பாடு என்பது விளங்கும். உபநிஷதங்கட்ட உண்மை யைத் துறவு மூலந்தான் அறிய முடியுமே தவிரப் பேராசையின் மூலம் அறிய முடியாது என்று கூறுகிறது. அமெரிக்காவின் வான ளாவிய செல்வ மாளிகைகளின் இடையே நான் செலவழித்த ஏழு மாதங்களில் அந்த நாடு எதிர்த் திசையில் முன்னேறுவதைக் கண்டேன். எந்த உலகத்தை, அற்பத்தனமானது, அழியக் தட்டியது என்று உபநிஷதம் கூறுகிறதோ அந்த உலகமே அங்குச் சகலமுமாக மதிப்புப் பெற்று விளங்குகிறது. அனைத்தையும் மூடிக் கொண்டு கிற்கும் ஆண்டவன்கட்ட அங்கு டாலர் என்னும் கனத்த தூசியால் மூடப்பெற்றுள்ளான். - ஒற்றுமையை உண்மையும், ஒற்றுமை இன்மையை செல்வமும் தருகின்றன. ஆன்மாவைப் பட்டினிபோட்டு, மயக்கம் தரும் அளவில், சேகரிப்பது ஒன்றையே நிறைவாகத் தருகிறது. செல்வம். நிறைய வைத்திருப்பது, மேலும் சம்பாதிக்கவேண்டும் என்னும் எண்ணத்தைத் துாண்டி ஓய்வையோ, இன்பத்தையோ பெற முடியாமல் செய்து விடுகிறது. - கிறைவை வேறு எங்கே காணமுடியும்? இந்த வினவிற்கு விடை, பழங்கில் இந்திய ஞானிகள்ால் கூறப்பெற்றுள்ளது; ஒற்றுமையில்தான் நிறைவைக் காணமுடியும் என்றனர் அவர்கள். ஆப்பிள் பழங்கள் மரத்திலிருந்து விழுவதை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று எண்ணிக்கொண்டே போகமுடியும். ஆப்பிள் விழுவதன் உண்மை, அது விழ விழ எண்ணிக்கொண் டிருப்பதில்தான் இருக்கிற தென்று கருதுகின்ற மனிதன், ஒவ்வொரு ஆண்ணிக்கை,ஆனவுடனும் அடுத்து என்ன என்ன ? என்ற விவிைறல் சிக்கிவிடுகிருன். அந்த விளுத் தோன்றுவதையோ, எண்